Photo: Meredith's Swifties
அரவாய்நீ சீறிடினும் ஆசைவிழி
மூடி…
மருளும்பொன் மான்தான்நான்
மாலைவர என்னுள்;
புரண்டொதுங்க நாணம் புனிததளம்
காண்பாய்!
சுரண்டுவாஉன் சொர்க்கம்
திறக்கும்!
அள்ளி குழல்ஒதுக்கி அதிசயமாய்
உன்னைஎன்றன்
மெல்லியப் பூங்கரத்தால்
மேனியை மாலையாக்கி…
முல்லைச் சரவாயால் முத்தமிடும்
போதுமொட்டு
மல்லிகைக்குள் துள்ளும்
மணம்!
பின்னிடும் புன்னகைப்
பின்னலில் உன்னிரு…
கண்களும் தூண்டிட, கண்டிட்ட
போதையால்;
என்னுள் மகிழ்ச்சி இதயத்துள்
குதிக்கஇந்த,
தண்நிலவு தான்தாவும் உன்மேல்!