அவள்:
அன்பே! என்னிடத்தில் உண்டு போர் படை!
இன்னும் தயக்கம் உனக்கு என்ன?
இங்கேவர உண்டு அங்கே தடை!
இங்கேவர உண்டு அங்கே தடை!
என்னை நீதொட உண்டு இடை;
பிடி அழகோடு காணஎன் எடை;
நீ என்னை உடன் அடை!
நான் அறிவேன் உன்வீர நடை!
ஆகி டாதே அது எந்நாளும் சோடை!
விரைவில் வந்து களை என்உடை!
விழி எழு புறப்படு - உன்னோடு
மோத தயார்நிலையில் என் காதல் படை!
அவன்:
தினமும் காதலில் என்னை நினைத்து
செய்கின்றாய்... தவம்!
தவம்முடிவில் உன்முன்நான் நிற்கின்றேன்!
தவம்முடிவில் உன்முன்நான் நிற்கின்றேன்!
உன்தவ வலிமையை அறிய உடன்-
நான் நம் சாதிகள் அன்ன களைந்திட்டேன்...
என் உடை! பிறகு ஏது நமக்குள் தடை?
என் உடை! பிறகு ஏது நமக்குள் தடை?