
ஏடுபிரித்து கவிதைநெகிழ - என்
நடனத்தில் உருளும் ரசிகனே!
நடனத்தில் உருளும் ரசிகனே!
சாடைசெய்யும் கண்ணோடு நீ...
சங்கமிக்க வேண்டுமே!
சங்கமிக்க வேண்டுமே!
ஊடல்எதற்கு
ஓர்கன்னிபோல்
ஒருக்களித்துப் படுக்கநீ...
ஒருக்களித்துப் படுக்கநீ...
ஆடிட்டதுஎன் அங்கமே!
ஓடிட்டதுஉறக்கமே!
ஓடிட்டதுஉறக்கமே!
ஆமையோட்டுள் ஆமை அன்ன
அமர்ந்திட்டாய்நீ நினைவிலே!
அமர்ந்திட்டாய்நீ நினைவிலே!
ஊமையாய் நம்காதல் ஏன்...
ஒளியலானது மூளையுள்?
ஒளியலானது மூளையுள்?
பாலுள்ளேநெய் கலந்தவாறு பதிந்து;
உலுக்கும் ஆசைகள் - என்
உலுக்கும் ஆசைகள் - என்
காலுள்போட கலகலக்கும்
கொலுசுஅன்ன சிணுங்குமே!
கொலுசுஅன்ன சிணுங்குமே!
உன்னுள் விழித்திருந்து தினமும் - உன்
உறக்கம்நான் அழித்திட்டேன்!
உறக்கம்நான் அழித்திட்டேன்!
கண்ணுள் ஊடுறுவ இரவுகளில் - நீ
காண்கனவும் கலைத்திட்டடேன்!
காண்கனவும் கலைத்திட்டடேன்!
கன்னிஎன் அன்புநோக்கு உனக்கு...
கடும்நோய் என்று விலகாதே!
கடும்நோய் என்று விலகாதே!
வந்துஎன்னை இதழ்களால் கடி - பிணி
உடன்மறையும் என்நெஞ்சே!
உடன்மறையும் என்நெஞ்சே!
Photo: Mental Power ห้องมหัศจรรย์
Photo: