செவ்வாய், 29 டிசம்பர், 2015

மழலையாய் மாறி குதூகளித்தேன் உன்னுள்!


Photo:    Alaina-aurora Dubois



காற்றின் அணைப்பில் கரையும் பனிமகனே!

ஆற்றுள்நீர் மீன்அசைய ஆடும் சிலிர்ப்பாய்-பா
ஈற்றில் நிரைநேர் இசைப்பதிப்பில் உன்வெண்பா-
ஊற்றில் உரைந்திட்டேன் நான்!

குழந்தாய் எனநீ குலாவிட்டாய் என்னுள்…
மழலையாய் மாறி குதூகளித்தேன் பாச-
மடந்தையே! ஏனோ மறந்தாய் உயிர்நான்;
விலகிடும் முன்காண் மகளே!  

ஞாயிறு, 20 டிசம்பர், 2015

என்​னை உன்​னோடு ஈரஇ​சையுள், வி​தை கவி​தை படிக்க​வே!



  
Photo:   Selena Gomez-News




பாயாநதி ஒன்று  வானம் ​நோக்கி பாராமுகி​லை ​தேட!
காயாகொடி ​பூ​வை​நாடா கருவண்டால் வாட...
ஓயாஆ​சை எண்ணம்  உ​டைப்படா திருந்திடு​தே!
​சேயாக வா​யேன்; தாலாட்டு​ வேன்ஓர் தாயாகி​யே!

தென்​னை இளநீ​ரோடு ​தேன்சு​வை சு​னைநீராட;
கண்​ணே! பரி​வோடு காதல்​செய்ய நான்நாள்பாரு!
என்​னை உன்​னோடு ஈரஇ​சையுள் இ​ணையஉடன்...
விண்​ணை இ​மைகள்  மூட வி​தைகவி​தை படிக்க​வே!






சனி, 19 டிசம்பர், 2015

கங்கை, என்னுள்நீ! காவிரி உன்னுள்நான்! தாவ...


  Photo:   Malini Sharma



*அண்ணலால் வடக்கும்; பகுத்தறிவு  
மின்னலால் தெற்கும்;


பின்னிய அறிவுப் பின்னலுள், இந்தியர்-

எனும் தெளிவில்!


விண்ணுள்முகில் இணைய; வெளிப்படும்- 
மழைநீர் அன்ன...
 
கண்உள்  மகிழ்ச்சிநதி கண்டேன்!   
நான்... அருந்திட்ட- 

கங்கை, என்னுள்நீ! காவிரி 
உன்னுள்நான்!  தாவஇன்று -

அன்பில் ஆனந்தம் துளிர்த்திடுதே... 
என்காதல் இளநீரே!


*அண்ண[லா]ல்  -  அண்ணல் அம்பேத்கர்

திங்கள், 23 நவம்பர், 2015

பற்றுஎன் பார்வை; உற்று நோக்குவா உலாவும் காதல்...



  Photos:   Keshika Sri Karthikeyan


உன்னை எண்ணாமல் ஒருநாளும் - உறவே!
என்னுள்மனம் நிம்மதி காண்பதில்லை!
கண்ணுள் தோன்றும் கனவுகளில்  உனக்கு,
இணங்கி டாமல் இருந்திடு வதும்இல்லை!

கனவில் நிலவை காலைவரை வருடு கின்றாய்!
நனவில் இரவுவிடிய  நாளும் விலகு கின்றாய்!
தினமும் காலை திகைக்கின்றேன்! பகல்முழுதும்...
நினைவில் தழுவும் நிலைஅறிய... தவிக்கின்றேன்!

என்னசெய்ய உன்அணைப்பில் ஒன்ற எண்ணும்;
நான்ஓர் காதல்  பைத்தியக்காரி!
என்னை இன்னமும் நேரில்வந்து இ​ணையாத -
நீஓர் மதசாதி மனநோயாளி!

சிட்டுக் குருவிஎன சிதறவிடு முத்தம் அன்பால்!
கொட்டும் அருவிஎன குவிய சத்தம் என்னுள்!
உற்று நோக்குவா உலாவும் காதல்இப் பெண்ணுள்
பற்றுஎன் பார்வை பருவம் உருளஉன் பண்ணுள்!