புதன், 13 ஜனவரி, 2016

என்வாய்க்குள் இனிப்புதடவு தமிழ்பாஅன்ன...

Embedded image permalink
   Photos: 
                                    
                                   


 

பூக்க கனிகளைகொடி புன்னகைத்து அசைக்க...
ஊக்கம் கொழுக்க மொக்கு தனைமறந்து உள்சிரிக்க;
ஏக்கம் விலக்கிமலர் மணக்க இதழ்களை பிளக்க...
நா-காவா குயில்இசையாய், நாற்திசையும் இணைக்க;
மொய்என்உள் கருவண்டே! முனகாதே தனியே அங்கே!

தேனுள் இதழ்கள்நீ காதல்செய்எனத் திறந்துற்றன சொல்! 
நானும்உன் தமிழ்பாட்டே! சுழற்றும்ஈர  இசைஊற்றே!
திக்குஎட்டும் திரைகடல் தாண்டி எக்காலமும் வியக்கின்ற;
முக்கனிச்சாறுள் முக்கிஎடுத்த ஓலைத்தமிழ் காற்றே! கீற்றே!

கிள்ளிடுவேன் முகர்ந்திடுவேன் தவறுதல் நிகழ்ந்திடாது!
மெல்ல இதழ்கள்பிரி பூவே! வெட்கம்விலகி அள்ளிடுவேன்!  
என்வாய்க்குள் இனிப்புதடவு தமிழ்பாஅன்னநீயாக ஆக்கு!
பின்உன்னை விலகி சிறகுவிரிப் பேனோநான் விண்ணுக்கு!

Embedded image permalink
 

திங்கள், 4 ஜனவரி, 2016

இயற்கைப்பெண் பாடென நோக்க, முகில்மறைத்த முழுநிலவு...

Embedded image permalink
  Photos:




இயற்கைபெண் தன்னைப் பாடென
நோக்க...

முதல்நாள் -
உன்னைநான்  பார்க்காதபடி;
கூந்தல்  முகிலாகி...
இரவை இருட்டாக்கிட்டது!
நிலவை மறைத்திட்டது!

இரண்டாம்நாள் -
முகில் கூந்தல், இருமலைகள்
உச்சி வருட...
நாணிய துகில் பனிதுகல்கள்;
நழுவிட்டது!

மூன்றாம் நாள் -
பார்த்ததுமே உன்பார்வை
பகலைத் தோற்றுவித்தது!
காதல் குயில் கவிதைப் பாடிட்டது!

நான்காம் நாள் -
எழிற் கூந்தல் தென்றல்பட்டு
சற்றே அகல அழகு மலைகள்
பார்என்றே நிமிர்ந்து
விண்ணை நோக்கிட்டன!

ஐந்தாம்நாள் -
பகலில் மலைகள்அடி வாரத்தில்
ஓர் வாழைஇலை குருத்து
விரிந்த அழகில் ...
சமவெளி அற்புதமாய் காட்சித் தந்தது!


ஆறாம்நாள் -
மது அருந்திட்ட குதிரைஅன்ன
அடங்க ஓர்நதியின் எழில்
கூடுதுறை சிரிக்க என்கண்கள்
தொட்டன!

இயற்கைப்பெண் பாடென  நோக்க...
ஏழாம் நாள் -
விழிதழுவிய இமைபிறைஎழிலில் - உன்
முகில்மறைத்த முழுநிலவு –ன்னை
மாட்டுக்கறி உணவாய், உண்ண...
விழிகள் முயங்கிட்டன!


Embedded image permalink 

வெள்ளி, 1 ஜனவரி, 2016

இங்​கேநீ என்​னை வந்த​டைந்தால்... முனகுவது இனி​மை​யே!

Embedded image permalink
    Photo: 




பாசபாலுள் பக்குவமாய் மணக்கும்என்...
நேச​வெண் நெய்​யே!

நீஉண்டு தழுவஉன் நி​னைவில்
சுவாசிக்கி​றேன் காதல்  தேன்ஈ​யே!

இதுதான் மெய்​யே! தூரமாய் தள்ளுகின்றது!
பிரிவு கை​யே!

துயருற்றாலும், உணர்வால் ஒன்றிட்​டோம்;
அதனால் உய்​யே!

சற்றும் ப​றைந்திட அதில்ஏதும் இல்​லை;
ம​றைக்க பொய்​யே!

இங்​கே என்​னை வந்த​டைந்தால்...
முனகுவது தனி​மை​யோ?  இனி​மை​யே!
இன்று அறிய  செய்​யேன்



Embedded image permalink 
Retweeted
Are we in the clear yet?