புதன், 4 மே, 2016

மானுட -- நாகரிகம் அன்பு கருத்தரிக்க சுதந்திரத்தை விளைவிப்போம்!

Dfddd

 

ஆண்

உன்னை நான் மணக்க முடியுமா?

பெண்:
ஏன் முடியாது?

பெண்ணே நீவெளி நாடு அல்லவா?

எந்நாடும் உலகில் உள்ளது!

காதல் மட்டுமே நாம்இணையப் போதுமா?
இடையூறு ஏதுமே... இல்லையா?

இருவரு​மே அன்பால் ஒன்றிட -
பேத ​தொல்லைகள் மானுட
நாகரிக அகிலத்தில் இல்லை அல்லவா?

கடைஆணி கழன்றிட்ட 
மாட்டு மரவண்டிஅன்ன - நாம்
குடைசாய்ந்து வீழ்வோமா?

ஆயிரமாய் நொருங்கிட்ட மானுடத்துள்
மதம் சாதி ஓதிடு வோன்தான் இன்றும்
காதல் கடையாணியா? 

நம்காதல் உடைந்திடாதா?
மத பேதங்களால்...
இருவரும் அடிமைகளாய் மண்ணுள் -
தொடர்ந்து ஒடுங்கிட மாட்​டோமா? 

காதல், மதம்சாதி அல்லவே?
கடை ஆணி களால் ஓடும்
மாட்டுமர வண்டிகளாய்-நாம்,
உடைந்திடவும் வேண்டாமே!

இது அன்பு இணைதள யுகம் அல்லவா?
உங்கள் ஆ​சை வளைத்தளம் திறந்து, 
கணனி காட்சிகள்அன்ன இணைந்து...

காதல் விண்கலத்தில் இ​ணைந்து  
செவ்வாய்மீது முத்தமிட்டு நகர்ந்து
பால்வெளி வீதியை ஆய்​வோ​மே!
இது அறிவியல் யுகம் அல்லவா?

சுதந்திரத்தை விளைவிப்போம்!
இருவரு​மேமானுட --
நாகரிகம் அன்பு கருத்தரிக்க
இ​ணைந்திருப்​போம்!

தாலி, கல்யாணம், தேவையில்லை!
தாமதிக்காமல் என்னோடு கல...வா!
இன்றும் ​வேத​னை காட்டு மரவண்டிகள்;
அறிவியல் உலகத்தில்நமக்கு எதற்கு?  


  

செவ்வாய், 3 மே, 2016

பெட்டிப் பாம்பே! என்னை கோயில்செல்வம்அன்னநீ பூசைசெய்ய…


INSTAGRAM
Selena Gomez official Instagram!

என்னுடைய மூளை உள்ளேநீ உலாவையிலே...
உன்னுடைய மனதுள்ளே யார்கனா காணுவது? - என்
நினைவில்நீ இருந்தால் இங்கே சரியேன்வா! - உன்
அணைப்புக்குள் பூமிநோக்க நிலாவைத் தருவேன்!
சிட்டுப் பாட்டு  தேன்லட்டு! சொட்டுது!  
சட்டென... பிட்டு  மெட்டு  விட்டு!   
கட்டுப்பூ மொட்டே! ஒட்டிடு முட்டிடு; 
பட்டுத் தட்டு திட்டுத் தொட்டு [உன்னை]
எட்டனுமே… என்இனிமை மெளனம் விட்டு!
 
சுற்று சுவர்மேல் அமர்ந்து கரைகின்றது கவனி காகம்! 
கட்டிப்பிடி என்று விரிந்து குளிர்கின்றது மேகம்!
பெட்டிப் பாம்பே! என்மீது ஊர்ந்து பார்! - ஆசைகள்
கொட்டிக் கிடக்கிடக்கின்றன! கோயில்செல்வம்அன்னநீ!
தட்டிபறி கனிகளை! பூசைசெய்ய… நாளுமே என்னை!

வியாழன், 21 ஏப்ரல், 2016

கார்முகில் விண்ணுள் புரள கைலாசம் தொடல் தூர​மோ?


  Photo:   Claudia Tan



இன்றுஎன் கவிதை இ​​ளைஞன் உதடுகளை

மென்றுமகிழ ​​தென்றல்அன்ன மெல்ல அணுகிஎன்னை

பிண்ணுகையில் தூக்கம் பிழைஉணரும்; ஏக்கம்என்-

கண்ணுள்ஒடுங்கி காணாது ஓடும்!



கார்முகில் விண்ணுள் புரள கைலாசம் தொடல் தூரமோ? 
சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே என்னைத் தேட...

ஓர்ஓடை நீர்சுழல் ஒய்யாரம் காண்என   ஆடஅவன்

பார்!ஆழி காண்பான்! ஆழமுடிவு வந்துறவே தெரிவேன்!



     
  Photo:   Claudia Tan

கருக​வோநான் குளிர்வி!வா ​கோ​டை​தேடும் அருவி​யே!


 
   Photos:   5h

கன்னங்களால் கடித்திழுத்தேன்! உதடுகள் அசைய...
கண்களினால் கவர்ந்தழைத்தேன்! கவிதைகள்புனைந்து;
காதுகளுள் காற்றாக்கி உரசிட்டேன்காதலை
மூளைவழிஉள் நரம்புகட்குள் விதைத்திட்டேன்!

ன்னுள் என்எண்ணங்களை நுழைந்திட்டேன்!
சின்னாப் பின்னமாய் என்னைப் பண்ணிடவோ...
கன்னிநான் உன்முன்னே புன்னகைத் திட்டேன்!
உன்முன்னங் கால்கள் முறிவுறநான் காரண​மோ?

தினமும்ஓர் கவிதைகாண் தின்பண்டம் போல்-என்
நினைவே என்னைநீ உண்ணுவதாய் உணருகின்றேன்!
கனவே! காதலா!நான் முனகவோ? காதல் கனலாகிட்டதே! 
அனலாய் அதனால் ஆகினேன்! ங்கிருந்தோ நோக்கி;
வறுபட வாணலியோநான் எனைநீ வறுத்திடலாமோ?
கருகவோநான் குளிர்வி! வாஎன் கோடைதேடும் அருவியே!