சனி, 27 ஏப்ரல், 2024

Taylor Swift ft. Shawn Mendes - Lover (Music Video)



அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான்
மெல்லிய பூங்கரத்தால் மேனியை மாலையாக்கி
முல்லைச் சரவாயால் முத்தமிட காண்பேன்என்
மல்லிகைக்குள் உன்னால் மணம்!

கொள்ளை நிகழாத குவலைமலர் மங்கைநான்
துள்ளி நடந்து துவளாது பாசத்தினால்
கள்ளமாய் ஏதும் இன்றி காதல் கனியவர...
எள்ளிவிலக லாமோ? ஏங்கிடுமே உன்இளமை!

உணர்வு நரம்புகளோஉறங்க மறுத்தலால்
கனவு நடுவிலே காதல் சிரித்தலால்
தினமும் உன்நினைவோ தீய்க்கும் நெருப்பாம்
நனவில்நீ தழுவு நழுவும்நம் தனிமையே!

அணிமணி துணிஎன ஆவலொடு அணுதினமே
கனிஉ(ண்)ணும் அணில்அன்ன கனிகொடி மேல்ஊறும்
மின்மினி மினிமினி எனஎன்னை சுற்றுதுஉன் காதலே!
பிணிபசி பி(ன்)னித்தணி நிலவுகண்டு படுபனி ஒளியே!

இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன
சிலைவடி சிந்தனையுள் சிற்பிஉளி அசைவுஅன்ன
அலைகடல் நுரையாய் ஆசைபிளா நிலாநோக்குதே
துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!

வாங்கும்என நீர்சுழலால் வருடும்நதி பூவனமே!!  தாங்கும் எனப்பரவி தழுவும்உயிர் மகரந்தமே!
தூங்கிடு எனசென்றான் துவண்டிடுமோ சுவாசமே!
ஏங்கிட செய்அவனை என்உறங்கா காதல்நிலவே!

 

தடவ பதிந்திட்ட தாம்முதுகில் ​கோடு*

தடவிட்டவன் ஆண்டவனாம் தப்பாதுஅம் மூன்று

தடஅணில் அன்ன​​நீ தக்கப்படி ​பெறஎன்றன்

இ​டைக்கீழ் எவன்​தொட்டான் முன்னம்! 


அழகியதமிழாய், இளகிய கனிப்பலாவாய், சுளையாய்;
கழலநிலம்மேல், ஒளியாய், சொட்ட; மழைபனி...
பொழிவாய், துளித்துளி, எழிலாய், துளிரதளிர;
உலாவிட கலையாய், நழுவும் நிலவாய் இரவுள்...

உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,
பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்] குளுகுளு
நிலவோ இனிக்கும்; அகிலமும் உன்தோன்றலில...
சுழன்றிட விடுபடவிடுமோ? நான்பாடும் பிரபஞ்சமே!

 

[*இராமன் எனப்படுவோனுடையது]

 

மலை முகடுகள்மீது பனிப்படுக்கை மயங்க

இயற்கை இனிமை!

நிலவும் முகிலும் தழுவி நீங்க...

வானம் இனிமை!

தாரகையர் தரணியை கண்டு ஏங்க

இரவு இனிமை!

நீயும் நானும் ஒன்றென ஒன்ற...

அன்பும் இனிமை!


தொட்டாலோ மெய்சிலிர்க்கும்; தொட்டுஅ விழஆசை,

திட்டாலோ பண்உதிர்க்கும்; தென்றல் கனியிதழ்தேன்,
சொட்டால்உன் வாய்மணக்கும்; சொக்கிமகிழ நீதாலி...
கட்டாமல் நான்மணந்தால் காதல்!

 

    முன்னால்நீ தோன்ற முழுநில வாய்

தன்னால் அகலும் தவிப்பே! 

என்அன்பே நாம்ஒன்ற காண்பேன் 

அந்நாள் வருமோ வந்தால்நான் வாழ்வேன்

பெண்ணாள் நெடுநாள்!

 


புதன், 22 நவம்பர், 2023

To do flower smiling,,.

 


Earth stares up Universe stars

Universe shares clouds fair air

Clouds hug wind and make rain

Rain touches and smells mountains

Mountains create rivers' fashion

Rivers and air do music oceans

Oceans waves jump to kiss shy moon

Moon scatters lightning towards me

To do flower smiling I wait for you.

ஞாயிறு, 19 நவம்பர், 2023

ஈரயிசை பள்ளியில்என் இடைஅருவி சுழலுள்...

 



தேனுள் இதழ்கள்நீ காதல்செய் எனத் திறந் துற்றன இதழ்கள்! சொல்...
நானும்உன் தமிழ்பாட்டோ? சுழற்றும்ஈர 
இசைஊற்றோ?
திக்குஎட்டும் திரைகடல் தாண்டி எக்கால 
மும் வியக்கின்ற;
முக்கனிச்சாறுள் முக்கிஎடுத்த ஓலைத்தமிழ் 
காற்றோ, கீற்றோ?

குடைவிரி நிழலே! குழம்பாதே என்னைநீ
தடையோ, சத்தமோ, செய்திடாது தழுவு 

மடைத்திறக்கும் ஈரயிசை பள்ளியில்என்
இடைஅருவி சுழலுள் நீந்தும் மீன்நீயே!


அலைகடல் நுரையாய் ஆசைநிலா...



கிள்ளிடுவேன் முகர்ந்திடுவேன் தவறுதல் நிகழ்ந்திடாது!

மெல்ல இதழ்கள்பிரி பூவே வெட்கம்விலகி அள்ளிடுவேன்!

என்வாய்க்குள் இனிப்புற்று தமிழ்பா அன்னநீயாக ஆக்கு!

பின்உன்னை விலகி சிறகுவிரிப் பேனோநான் விண்ணுக்கு!

இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன

சிலைவடி சிந்தனை சிற்பிஉளி அசைவுஅன்ன

அலைகடல் நுரையாய் ஆசைநிலா நோக்குதே

துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!