திங்கள், 20 ஏப்ரல், 2015

நீ என்னை, தமிழ் சந்தமாய் சுழற்றிடு என்காதலா!



 
   Photo  :  Taylor Swift Universe




அன்புப் பண்பாட்டுள் தாலி, அடி​மைநி​லை அ​டையாளம்;
      எனும் அறிவில் அஃதுவிலகி…      

என்னுள்நீ  மானுடஇயல்பியலில் சங்கமித்து இல்லற,
      து​ணைவிஆக முற்ப்பட்டதால்...

விண்​தொட்டு ​ஏறிற்​ற​தே ஆ​சை;  அதனால்  ​வெற்றி​லை,
      தா​னே விரிய; பாக்கு,

உண்​ணென்று தந்திட்​டேன் உரி​மையுடன் நா​னே;
      சிவக்கும் சுண்ணாம்பு ​அறி​யேன்!


நாணத்தால் உன்​னைக் கண்டிட்டதும், ​நடனம்; ​
      செய்திடும் மயில்அன்ன நீஎன்னை,

காணத்தான்  தினமும்; உனக்காக​வே  கவி​தைகள்...
      பாடிடும்  குயில்அன்ன நான்!

வானத்​தை ​​வருடிடும் ​மேகத்​தை ​உன்மயக்கத்தில்
      நெருடிடு​தே நிலவும்; உன்​னை…

​பேணத்தான் ​மகிழ்​வேன்​? தமிழ் சந்தமாய்…
      சுழற்றிடு என்​னை என்காதலா!


சனி, 11 ஏப்ரல், 2015

For high sky and Milky Way, Is this earth’s relationship origin?

  Photos:    Taylor Swift Universe

உள்வான நடுவயிற்றில், பூமியின் உறவுப்படி;
என் இள​மைப் பருவத்தின் ​தொப்புள் ​கொடி!
இ​டையில் காண் பால்​வெளி வீதிவழி!
மணம் தூவுது ஓர் ​ரோசா கொடி...
இதழ்கள்ளுள் நெடி – அது,
​மேகத்துள் பின்னும் மின்னல் ​செடி!
இ​டையி​டை​யேஇடி துடிக்கும்படி;
யார் ​செய்வது ஓ​சை அதிரடி!
நீதான் என்னுள்வந்து கண்டுபிடி!


[In English]

Is this earth’s relationship origin?
Seems as my beauty navel?
For high sky and seen Milky Way!
Here a creeper flower let out odder!
Why and what for it happens?
That’s occurring because of...
Blue sky black clouds’ red lightning;
As such my hip while shower created;
Through thundering sounds!
Again, you may try and trace out...
The beetle who did sound
Around this creeper flower!


வெள்ளி, 10 ஏப்ரல், 2015

போகாமல் உன்நினைவு புன்னகைக் கின்றதே!






Photos: Taylor Swift Universe



சிவன்கதைத் தீயாய் தினம்தினம் தீய்க்க;
குவிந்திட்ட ஆசை கொதிகலன் ஆக;
துவள்இடைநீ வந்திடாமல் துன்பமாய் மாற,
தவிக்குதேஎன் காதல் தடம்!

காயும் நிலவோ? கருக்குகின்ற சூரியனில்
பாயும் கதிர்சூடோ? பார்வையினால் மேய;
கடைவேல் விழித்தீ கணைப்பட்டு நெஞ்சு,
தொடையிடை சூடான  தே!

மண்மகன்நீ வந்து மயக்கியே முன்இரவில்
பின்னிப் பாடர்ந்தா​யோ? பின்னிரவில் மின்னஒளி;
கண்எதி ரேதோன்றி காதல் தரபோதை;
இந்நிலவு சுட்டிட்டது ஏன்!?

போகாமல் உன்நினைவு புன்னகைக் கின்றதே!
பூமாலை நீதான் போட்டிடேன் பூமேனியாள்;
பாமாலைப் பாடி பரவசத்தில் நீஆழ்த்த;
சோமாரி யே!உனக்காய் தூதுவிட்டேன் விண்ணிலவை;
கா!மாலை காதலாநோய் ஆற்று!


 [சோமாரி யே! - சோ என பெய்திடும் மழையே!]

திங்கள், 6 ஏப்ரல், 2015

கிருஸ்தவ மதம் மாறியோர்க்கு இந்நிலைமை,இன்று இல்லை

 
  புகைப்படம் :   Thanthi TV
 
 
களைப்புக்கு ஏற்ப கடும்பசிக்கு எல்லை இல்லை!
இளைத்தும் பசிக்கு ஏற்பகூழ் இல்லை!
உழைப்புக்கு உண்மைக் கூலிதரப்பெற வில்லை!
விளைவித்தும் அரிசி வீண்கனா
சரிவர ண்டதிலலை!

ஆலயத்துள் அர்சகனாய் திருடிட்ட தில்லை!
ஆலய வருமானஓசி ஆதாயத்தில்
உயிர், நீடித்திடவில்லை!
எக்காரணத் தால்பறைந்தான்...
இவன்ஆண்டவனின் பிள்ளை! [ஆனால்]
அக்ரகாராத்தான் ஆனந்தம் அன்ன
பெரும்பான்மையினர் துய்த்திட்டதில்லை!

மடஅய்யன் கோயில்முன் புழுதிதெருவில் விசிறி
உடைத்திட்ட தேங்காயை பொறுக்கித் தின்றதில்,
படைத்திட்ட கடவுள் வாரிசுகளிடை பிளவுசண்டை!                              கிடைத்திட்டது பசியாற சிரமமின்றிதினம் உயிர்தப்ப!
அடைந்திட்ட மாட்டிறைச்சி அதுதான் உணவு எல்லை!
 
[இது ஆங்கிலேயர் ஆட்ச்சிக்குப் முன் வாழ்ந்திட்ட   
இந்து பூர்வக்குடிகள் அனுபவிதிட்ட கொடுமை;                   [கிருஸ்தவ மதம் மாறியோர்க்கு இந்நிலைமை,இன்று 
அறவே இல்லை] இவர்களில் எவருக்கு சமூகஇழிவு 
களை இல்லாது செய்திடும் இந்து நடைமுறை 
இடஒதுக்கீடு?
 
செய்திடும் தொழில்கள் அடிப்படையில் இடஒதுக்கீடு 
செயல்முறைப் படுத்திட, விரைவில் சாதிகள் 
மறையும்!] 

சாதிக்குப் பின்தான் சகலமும்; சாவு...
செய்தியாய் தினமும் ஆகிடும்;
தெய்வம், மதம், நாடு, நகரம், உலகம்;
மாயும்வரை போற்றும் தாய்மொழிஉணர்வும்;
ஊரும், உறவுகளும், சொந்தங்கள், பந்தங்கள்;
நேர்மை, நீதி, நியாயம், நாணயம், என்று...
எதுவும் சாதிக்குப் பின்தான் சகலமும்!

நேர்மை, நீதி, நியாயம், நாணயம் கூட;
சாதிகள் அடிப்படையில்தான்...
எனும்படிக்கு (மனுஸ்மிருதி அதர்ம
அநீதி ஆதாரத்தில்) நாடு,
இன்றும் சாதி வேற்றுமைகளில் மிதக்க...

உன்னை நீ ஆண்டுகொள்!
என்னை நான் ஆளுகின்றேன்!
நீ வேறு சாதி; நான் வேறு சாதி;
என்று நிலவரத்தில் நீ வாழ...
நீ யார் என்னை ஆள?


என் சாதி மக்களுக்கு என்ன
செய்ய வேண்டுமோ நான் செய்கின்றேன்
உன் சாதி மக்களுக்கு நீ என்ன
செய்கின்றாயோ... செய்துகொள்!
[பின் இடஒதுக்கீடு எம் சாதியினருக்கு 
யாரும் செய்திட வேண்டாம்!]
 
சாதிகள் வாரியாக மாநிலங்கள்           அடைவோம்! சாதிகள் வாரியாக                                    மாநிலஅரசுகளமைந்திட செய்வோம்!
அதன்பிறகு வேற்றுமையில் ஒற்றுமை
காண்போம்!