வெள்ளி, 27 மார்ச், 2015

பேதையில்லை[நான்]; போதைதரும் விருந்து...



 


காணுள்ஓர் பூ​மேல் கவிழ்கரு வண்டுகண்டு,
தேன்தீண்டும் பா​வை திறக்கயிமை கண்மூட;
மேனியுள் ஊர்ந்துபின் மீண்டிடும் உணர்​வேஉன்,
ஊணு​ளே ஒன்றும் நிலாநான்!

பின்​னிடும்உன் புன்ன​கையின் பின்னலில் என்னிரு
கண்கள்  இணங்கிட, கண்டிட்ட ஆ​சைகள்;
தம்முள் குதித்திடத் தாவுகின்​றேன்; என்​னை​வறுத்தும்,
தண்ணில​வை தாண்டுவா காதல்!

அரும்பிட​வே காதல்அ​லை சைகளாய் மாறி,
விரும்பி உனக்கு விருந்தாகும் ​​நேரம்;
திரும்பி​யே செல்ல, சிறுமி​யோ? யானும்;
கரும்​பே கனிகளை உண்!

முல்​லை​மலர் மொட்டுகண்டு முட்டுகின்ற சிட்​டே?நீ,
எல்​லையிலா(து) ​​உன்றன் இதழ்​உறிஞ்ச தேன்அதில்என்
வெள்​ளைப்பல் பட்ட பரிதவிப்பில் செல்லா​தே!
தொல்​லையி​டை சொர்க்கம்​காண் என்னுள்!

பேதையில்லை[நான்]; கொடியில் பிரியும்சுளை கனிந்து,
போதைதரும் விருந்து; பூவெனவே மலர்ந்து,
காதல்மது சுரந்து கற்கண்டே எழுந்து,  
மோதும்கடல் அலைகரைப்போல் முத்தமிடவா விரைந்து!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக