Photo : Taylor Swift Universe
அன்புப் பண்பாட்டுள் தாலி, அடிமைநிலை அடையாளம்;
எனும் அறிவில் அஃதுவிலகி…
என்னுள்நீ
மானுடஇயல்பியலில் சங்கமித்து இல்லற,
துணைவிஆக முற்ப்பட்டதால்...
விண்தொட்டு ஏறிற்றதே ஆசை; அதனால்
வெற்றிலை,
தானே விரிய; பாக்கு,
உண்ணென்று தந்திட்டேன் உரிமையுடன் நானே;
சிவக்கும் சுண்ணாம்பு அறியேன்!
நாணத்தால் உன்னைக் கண்டிட்டதும், நடனம்;
செய்திடும் மயில்அன்ன நீஎன்னை,
காணத்தான்
தினமும்; உனக்காகவே கவிதைகள்...
பாடிடும் குயில்அன்ன நான்!
வானத்தை வருடிடும் மேகத்தை உன்மயக்கத்தில்
நெருடிடுதே நிலவும்; உன்னை…
பேணத்தான் மகிழ்வேன்? தமிழ் சந்தமாய்…
சுழற்றிடு என்னை என்காதலா!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக