Photos: Taylor Swift Universe
தீண்டிஉன்னை பார்வையினால் தீய்க்கின்ற மாது!(நான்),
பாண்டியனின் சின்னம்இரண்டைப் பாயவிடும் போது;
வேழம் மலையோன் வில்அம்பாய் வெல்புருவத்தோடு,
சோழன்உன் கொடிச்சின்னம் தோற்றோடும் காடு!
[பாண்டியனின் சின்னம் - மீன் (கண்களுக்கு உவமையாக
சொல்லப்பட்டுள்ளது)
வேழம் மலையோன் - சேரன்
சோழன் கொடிச்சின்னம் - புலி]
அத்தான்நீ ஆசைகொள்ள, ஆகாநான் காதலிக்க;
பித்தானை அன்ன பிரியாமல் முத்தாட;
நீர்மறைவில் ஆடிப்பின் நின்று களைப்பாற;
தாமரைமேல் தாவினவே மீன்கள்!
தாமரை - ‘முகத்துக்கு’ உவமையாக சொல்லப்
பட்டுள்ளது.
மீன்கள் - கண்கள்.
தாமரை மலர்கள் மீது தா ‘மது’ என்றே வந்து...
ஆ!மறைவு ஏதுமின்றி அமர்ந்திடுமே வண்டுகள்அன்ன;
ஓ!குறைஏதும்இன்றி உயர்ந்திட்ட காம்புகள்கண்டாய்!
தீயறைஎரி விறகுகாய் சிக்குண்டாய் தீய்ந்தாய்போ!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக