வியாழன், 22 அக்டோபர், 2015

ஓயா ஆசை தேயும்! சாயங் காலம் நீவா ஓய்வேன்!



 



என்ன நினைவோநீ ஏங்கி செதுக்கிதினம்...
பின்ன கனவுள்;நான் பெண்நனவில், என்செய்வேன்?
மின்னும் இடிமுகில்! திக்குஅறி சாரலே!என்...
கண்ணுள் அசையஉன்னைக் காண்பேன்!

தீவுள் கூவும் குயிலை நீவும்...
       பாவுள் நாவும், நாவுள் பாவும்;
தூவ பூவாய் உட்புகும் காதல்...
       தாவும் தீயோ? சுடுதே ஆயேன்!
காயும் உன்நிலவுள் ஆயும்தேன் ஈயே!
       ஓயா ஆசை நோயும் தேயும்! [இன்று]
சாயங் காலம் நீவா ஓய்வேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக