Photos:   Keshika Sri Karthikeyanஉன்னை எண்ணாமல் ஒருநாளும் - உறவே!
என்னுள்மனம் நிம்மதி காண்பதில்லை!
கண்ணுள் தோன்றும் கனவுகளில் உனக்கு,
இணங்கி டாமல் இருந்திடு வதும்இல்லை!
கனவில் நிலவை காலைவரை வருடு கின்றாய்!
நனவில் இரவுவிடிய நாளும் விலகு கின்றாய்!
தினமும் காலை திகைக்கின்றேன்! பகல்முழுதும்...
நினைவில் தழுவும் நிலைஅறிய... தவிக்கின்றேன்!
என்னசெய்ய உன்அணைப்பில் ஒன்ற எண்ணும்;
நான்ஓர் காதல் பைத்தியக்காரி!
என்னை இன்னமும் நேரில்வந்து இணையாத -
நீஓர் மதசாதி மனநோயாளி!
சிட்டுக் குருவிஎன சிதறவிடு முத்தம் அன்பால்!
கொட்டும் அருவிஎன குவிய சத்தம் என்னுள்!
உற்று நோக்குவா உலாவும் காதல்இப் பெண்ணுள்
பற்றுஎன் பார்வை பருவம் உருளஉன் பண்ணுள்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக