Dfddd
Photo:
ஆண்
உன்னை நான் மணக்க முடியுமா?
பெண்:
ஏன் முடியாது?
பெண்ணே நீவெளி நாடு அல்லவா?
எந்நாடும் உலகில் உள்ளது!
காதல் மட்டுமே நாம்இணையப் போதுமா?
இடையூறு ஏதுமே... இல்லையா?
இருவருமே அன்பால் ஒன்றிட -
பேத தொல்லைகள் - மானுட
நாகரிக அகிலத்தில் இல்லை அல்லவா?
கடைஆணி கழன்றிட்ட
மாட்டு மரவண்டிஅன்ன - நாம்
குடைசாய்ந்து வீழ்வோமா?
ஆயிரமாய் நொருங்கிட்ட மானுடத்துள்
மதம் சாதி ஓதிடு வோன்தான் இன்றும்
காதல் கடையாணியா?
நம்காதல் உடைந்திடாதா?
மத பேதங்களால்...
இருவரும் அடிமைகளாய் மண்ணுள் -
தொடர்ந்து ஒடுங்கிட மாட்டோமா?
காதல், மதம்சாதி அல்லவே?
கடை ஆணி களால் ஓடும்
மாட்டுமர வண்டிகளாய்-நாம்,
உடைந்திடவும் வேண்டாமே!
இது அன்பு இணைதள யுகம் அல்லவா?
உங்கள் ஆசை வளைத்தளம் திறந்து,
கணனி காட்சிகள்அன்ன இணைந்து...
காதல் விண்கலத்தில் இணைந்து
செவ்வாய்மீது முத்தமிட்டு நகர்ந்து
பால்வெளி வீதியை ஆய்வோமே!
இது அறிவியல் யுகம் அல்லவா?
சுதந்திரத்தை விளைவிப்போம்!
இருவருமே, மானுட --
நாகரிகம் அன்பு கருத்தரிக்க
இணைந்திருப்போம்!
தாலி, கல்யாணம், தேவையில்லை!
தாமதிக்காமல் என்னோடு கல...வா!
இன்றும் வேதனை காட்டு மரவண்டிகள்;
அறிவியல் உலகத்தில், நமக்கு எதற்கு?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக