ஞாயிறு, 24 ஆகஸ்ட், 2025

தீண்டிஉன்​னை பார்​வையினால் தீய்க்கின்ற மாது!

 



தீண்டிஉன்​னை பார்​வையினால் தீய்க்கின்ற மாது!(நான்),

பாண்டியனின் சின்னம்இரண்​டைப் பாயவிடும் ​போது;

​வேழம் ம​லை​யோன் வில்அம்பாய் ​வெல்புருவத்​தோடு,

​சோழன்உன் ​கொடிச்சின்னம் ​தோற்​றோடும் காடு!

 

[பாண்டியனின் சின்னம்     - மீன்  (கண்களுக்கு உவ​மையாக

                                 சொல்லப்பட்டுள்ளது)

வேழம் ம​லை​யோன்          -  ​சேரன்

​சோழன் ​கொடிச்சின்னம்   -   புலி]


திங்கள், 23 ஜூன், 2025

கையில் ஒன்ற அன்பில் வேற்றுமை அவிழ்க்கும் நாடாஆகிடுவேன்!



வெய்யில்தொட வேகாமல்

சுடுகின்ற ஓடாகின்றேன்! - என்றன்

மையல் படநீ மகிழ்ந்து படிக்கின்ற

காதல் ஏடாகின்றேன்! - இந்தத்

தையல் அன்றாடம் குளிப்பதற்கு

தலையாட்டும் ஆடாகின்றேன்! - நீ

நெய்யை ஓதுவோனாய் வீணாக

நாளும் நெருப்பிலிடாது  - உன்றன்

கையில் ஒன்ற அன்பில் சாதி

வேற்றுமை அவிழ்க்கும் நாடாஆகிடுவேன்!


வெள்ளி, 11 அக்டோபர், 2024

நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல...

ZAYN, Taylor Swift - I Don’t Wanna Live Forever (Fifty Shades Darker)


¾Ä¢ò§¾ºò ¾¢ø¿¡ý º¡¢ò¾¢Ã« §º¡¸ý¸ñ

ŢƢòÐò ¾Á¢ú¸É¢ó¾ ¦ÅøÄ¿¾¢ ¸¡¾ÄÉ¡ø

ÌÇ¢òЫÕÅ¢ ¦ÅûÇõ ̾¢ò¾¡ü§À¡ø ÝòÃ

அழுக்கை  அகற்றி º¢Ä¢÷ò  ¾¢ð§¼ý!


¾¢í¸ ¨Çº¢Åý º¢Ãº¢ø «½¢ó¾¢Õô À¾¡¸ ¦À¡ö¸¢È¡ý

¸í¨¸ ¨Â«Åý ÌÎÁ¢Ôû ¸¡ðº¢Â¡ì¸¢ º¢¡¢ì¸¢È¡ý

ºí¸ ¼í¸û º¡ì¸¨¼ º¡¾¢ À¾÷¸Ç¡¸¢ Å¡ú¸¢È¡ý

Å¢í¸ Çí¸û §À͸¢È¡ý Å¢ÅÃõ²Ðõ ¦¾¡¢¸¢லாý

 

Å¢ñ½¢ýÚ Åó¾¡É¡õ §ÅüÚĸý µÐ¸¢È¡ý!

¦Àñ½¢ýÚ Â¡Õõ À¢Èó¾¡÷±ý Ú¨ÃôÀ¡§É¡?

Áñ½¢ýÚ ÀÈ󾸡üÚ Áñ¨½²ý ÍüÚ¾¡õ?

¸ñ½¢ýÚ ÍÆÄÀ¡÷¨Å ¸ñŢĸ¢ µÎ§Á¡?

±ýÉ¢ýÚ ¦¸¡¾¢ìÌãîÍ ±¹§¸?¿£ §¾Î§¾!

 



ஞாயிறு, 29 செப்டம்பர், 2024

நீ வாடி வாசல் தாண்டி திமிரும் காளை போல 🔥 | Ethirneechal | Tamil Serial |.

https://image3.affcoder.com/storage/images/1701538212xd4if4Y8g5bXMSxsW1te.jpg

தொட்டாலோ மெய்சிலிர்க்கும்தொட்டுஅ விழஆசை,

திட்டாலோ பண்உதிர்க்கும்தென்றல் கனியிதழ்தேன்,
சொட்டால்உன் வாய்மணக்கும்சொக்கிமகிழ நீதாலி...
கட்டாமல் நான்மணந்தால் காதல்!

காதலா!நீ தாலி அவசியமா? எனவினவும்  முற்போக்குச் சுதந்திர சிட்டு!                

ஆதலால் ஆசை துளிர்த்திட எனக்கு 

மோதிரம் அணியமண ஓசைக்காக பகலிலும்

தூதுவிடும் கனவுகள்; எத்தனை நாட்கள் வீணாகுமோ!?


 பாற்கடல்​மேல் பரந்தாமன்க​தை அன்ன... காதல்

பாம்பு படகாய் மாறநீ படுக்க… நான்

பட​கோட்டி மகளா​க, பட​கோட்டிட ;

உனக்காக, உன்முகம்​நோக்க…

[இது கனவில்…]

 

விடி​வெள்ளி மு​ளக்க – என்

மடிமீது நீ விழிமூடி அதிகா​லை

மயங்க நான் முயங்க…

 

கா​லை உண​வை என்வாயில்

நீ ஊட்ட ​சொட்டும் உன்

உமிழநீ​ரை

நான் ​தேனாக து​டைக்க

 

அலுவலகம் புறப்படும்​நேரம்

இருசக்கர ஊர்தியில் உன்பின் நான்

பின்இருக்​கையில் அமர…

என்இடதுகரம் உன்இடுப்​பை பற்ற

வலது கரம்  உன் ​தொ​டை​யை வருட…

 

அலுவலகத்தில்  வரு​கை​யை உறுதி​செய்து

​கை​யொப்பமிட்டுப் பிரி​கையில்

என்​னைநீ ஒருமாதிரி பார்க்க

பிரிவுஏக்கம் என்​னையும் தாக்க

 

ஓர் அ​ரை மணி​நேரம் பிரிவு தாளாமல்

என் இருக்​கைக்கு நீ வந்து

​தேனீர் அருந்த அ​ழைக்க…


கா​லை உணவு உண்ட   

நிகழ்வுகள் மதிய​வே​​ளையிலும்

மாறாமல்அன்புப் பரி

மாறல்கள் நிகழ


பார்த்​தோரில் பலர் இக்காட்சி​யை ரசிக்க

ஒரு சிலர் தூ  பட்டப் பகலில்

வெட்கங் ​கெட்ட பிறவிகள்

என்று நம்​மைத் தூற்ற


அலுவல் ​நேரம் மா​லை வர

முற்றுப்​பெற

க​டற்க​ரை சா​லைவழி

இருவரும் கை​கோர்த்து நடக்க

போகிறவனும் வருகிறவனும்

திரும்பித் திரும்பி  

நம்​மைப் ​பார்த்து கிளுகிளுக்க…

 

இப்படி எல்லாம் நடந்துற என்று

ஆ​சைகள்என் மனதுள்

எப்​போதும் உலாவ


ஒவ்​வொரு நாளும் என் காதலா…

என் காதலா

என்எண்ணங்களுள் துளாவ

 

இப்படி ஓர் ஏக்கம் பல ஆண்டுகளாக

என் இதயத்​தை து​​ளைக்க

ஆ​சைக​ளெல்லாம்


நி​றை​வேறாமல் மடிந்துற்றன​வே!

மத ​பேதங்கள் நம் இருவ​ரையும்

பிரித்திட்டன​வே!

 

கடவுள் இருந்தால் நமக்குள்

இப்படி ஓர் பிரிவுத் துயரம்

நிகழ விடுவா​னோ?

கடல்உள் கழிவுநீர் கலப்பதால், கடல் வளம்;
மாசுபடு கின்றது!
காதல்முகத் துவாரரங்களுள் மதநச் சரவுபுக;
மானுடம் கெடுகின்றது!
உடலுள் சாதி* உதிரம்எது? நீர்இலா பூமியாய்;
உணர்வு வெடிக்கின்றது!
தடைஉடை! இந்து ஒட்டைஅடை; துயர்அறு...
இன்று தேசம் செவ்வாயில் !

*
சொட்டும்

Open: 

புதன், 22 மே, 2024

என்​னைக் கனவிலாடி ஈ​ரோடு ​போனவ​னை...

 



சித்தரித்தாய் சித்திரமாய் சிறைஎடுத்தாய் என்னுள்அன்பு-

தத்தளிக்க குண்டுமல்லி கொடியிடையில் பூப்பிளக்க

பித்தளித்தாய் தவிக்கவிட்டாய் பேச்சிழக்க நித்தமும்என்னை;

பைத்தியமாய் காதலைநான் பார்ப்பதற்கோ விட்டகன்றான்?


சித்திரையா வைகாசியா மார்கழி புரட்டாசியா?

ஐப்பசியா கார்த்திகையா ஆனிஆடி ஆவணியா?

பங்குனியா தைமாசியா பன்னிரெண்டு மாதங்களில்;

எந்தமாதம் இன்புறஎன் தலித்மாமன் வருவானோ?


கூடுத் துறைகண்டேன்; குடையும் மதுவண்டு-

தேடும் வயல்கண்டேன்; திரண்ட கனிகொடியில்-

ஆடும்இலை கண்டேன்; அரவுப்பாற் கடல்அசைய

ஓடுபடகில் நதிஅழகில் ஊடுசுகம் கனவானதே!


என்னைக் கனவிலாடி ஈரோடு போனவனை

இன்றுநான் காணலையே ஏங்குகிறேன் - செல்நிலவே!

சென்றுஅவனைக் கண்டு திரும்பிவரச் சொல்லேன்

கன்னிஎன் கண்ணுறங்கி டும்!


மதுவழங்கும் பூவுள் மயங்கிடும் வண்டு

எதுகையொடு மோனை இணைய புதுக்கவிதை;

பாடுகிற போது பரவசத்தில் பூவனம்

​​தேடிடுமோ தென்றல் துணை!


பூத்தேடும் வண்டே! புன்னகை யோடுமா ஆடும்

*தீகோடு தாண்டு தேன்பண்டம் கண்டு-உன்

‘பா’க்காடும் மொட்டு மகரந்தத்துள் உருண்டு-என்

நாக்காட தமிழ்பாடும் நாயகனை வரச்சொல்!


தட்சணைமேல் ஆசையோ? தங்கநகை மோகமோ?-உன்

மச்சினிபோல் ஒருத்திவந்து மயக்க ‘மது’ தந்திட்டாளோ?

கத்தரித்தாய்! தினமும்ஏன் ஏங்கவிட்டாய் இராப்பகலாய்?

கத்தரிக்காய் ​​கொஞ்சலுக்கா காத்திருந்தேன் செப்புநெஞ்சே!

 *திருச்​​செங்கோடு


அவனின் நினைவால் அன்றாடம் தீய்ந்தேன்

குவியலை காதல் கொதிகலன் ஆக

துவளிடை காய துயரத்தால் தேய

தவிக்க​​​​​வோஆசைநிலை கள்!

 

ணையுடைந்த வெள்ளமா? அலைஎழுப்பும் ஆழியா?

னைமரத்தில் கசிந்தகள்ளை பருகஊறிடும் போதையா?

பசிஎடுக்க இறைநோக்கி பாய்ந்திடும் வனவேங்கையா?

உருசிகொடுக்க ஒழுகிடும் என்தேன்கூடு காதல்தாபமே!


பண்ணையா? தெற்கு பார்த்து நிமிர்ந்திருக்கும்

புன்னையா? புன்னை சூழ பூத்தழைக்கும்

தென்னையா? செப்பு ஒளிசிதறும் இரவுநிலா-

பெண்ணாய் என்னைஏன் தடவுகிறாய் தென்றலே?

 

மேகம் விலகிட மின்னல் பளிச்சிட

தாகபுவி வெப்பம் தணித்திடும் பூமழையே!

வேகமாய் ஓடுபிரிய மேனி கருத்தவனை…

தேகம் சிவக்கவரச் செய்!

 

பற்றத்தான்காதல்தை பற்றத்தான் மாமன்கை

முற்றத்தான் சேய்ஆசை முத்தமிட இன்புற்று

பற்றத்தன்அன்னைமுலை பத்துமா தத்துள்ளே

தொற்றப் பிறப்பானோ நெஞ்சே! 

 

 ஊறும் கிணறாகி; ஓடிவரும் ஆறாகி;

ஆறும் பாலாகி; அருந்திடும் மோராகி;

ஏறும் எறும்பாகி;  தீயாக நெய்உண்ண

சேரும் நாளெண்ணி முனகிடு தே​மார்பு


பூமி என் கால்களுக்குக் கீழே நகர்கிறது; 
எனவே, 
சந்திரனைப் போல, நான் உலகம் முழுவதும் 
பறக்கின்றேன்! 
வானத்தில் மேகப் படுக்கையில் ஓய்வெடுங்கள்!
  
உன்னால் தான் இப்படி உருள்கின்றது பிரபஞ்சம்! 
சூரியன் தென் திசையில் தொடங்காதே! 
பூமியின் கிழக்கு நிலையில் இருந்து எழுந்தாலும்; 
இதனால் 
எல்லாத் திசைகளும் என்னை நோக்கிப் பார்க்கின்றன; 

ஆனால் என் கண்கள் நீ இருக்கும் மேற்குப் பகுதியையே 
 பார்க்கின்றன! 
 நீங்கள் ஏன் என் அருகில் வரக்கூடாது?  
காதலர் தினத்தில் கூட!
 
வானத்தில் இரவு காதல்நிலா எப்போது சிரிக்குமோ? 
ஒருகோழி தன்சேவலுக் காகஇங்கே காத்திருக்கிறது!


சனி, 27 ஏப்ரல், 2024

Taylor Swift ft. Shawn Mendes - Lover (Music Video)



அள்ளிக் குழல்முடிந்து ஆசையோடு உன்னைநான்
மெல்லிய பூங்கரத்தால் மேனியை மாலையாக்கி
முல்லைச் சரவாயால் முத்தமிட காண்பேன்என்
மல்லிகைக்குள் உன்னால் மணம்!

கொள்ளை நிகழாத குவலைமலர் மங்கைநான்
துள்ளி நடந்து துவளாது பாசத்தினால்
கள்ளமாய் ஏதும் இன்றி காதல் கனியவர...
எள்ளிவிலக லாமோஏங்கிடுமே உன்இளமை!

உணர்வு நரம்புகளோஉறங்க மறுத்தலால்
கனவு நடுவிலே காதல் சிரித்தலால்
தினமும் உன்நினைவோ தீய்க்கும் நெருப்பாம்
நனவில்நீ தழுவு நழுவும்நம் தனிமையே!

அணிமணி துணிஎன ஆவலொடு அணுதினமே
கனிஉ(ண்)ணும் அணில்அன்ன கனிகொடி மேல்ஊறும்
மின்மினி மினிமினி எனஎன்னை சுற்றுதுஉன் காதலே!
பிணிபசி பி(ன்)னித்தணி நிலவுகண்டு படுபனி ஒளியே!

இலைகொடி இடைநுனி முகர்சுவை கனிஎன
சிலைவடி சிந்தனையுள் சிற்பிஉளி அசைவுஅன்ன
அலைகடல் நுரையாய் ஆசைபிளா நிலாநோக்குதே
துளஅவன் வரவே தூதுசெல் என்முகிலே!

வாங்கும்என நீர்சுழலால் வருடும்நதி பூவனமே!!  தாங்கும் எனப்பரவி தழுவும்உயிர் மகரந்தமே!
தூங்கிடு எனசென்றான் துவண்டிடுமோ சுவாசமே!
ஏங்கிட செய்அவனை என்உறங்கா காதல்நிலவே!

 

தடவ பதிந்திட்ட தாம்முதுகில் கோடு*

தடவிட்டவன் ஆண்டவனாம் தப்பாதுஅம் மூன்று

தடஅணில் அன்ன​​நீ தக்கப்படி பெறஎன்றன்

டைக்கீழ் எவன்தொட்டான் முன்னம்


அழகியதமிழாய்இளகிய கனிப்பலாவாய்சுளையாய்;
கழலநிலம்மேல்ஒளியாய்சொட்டமழைபனி...
பொழிவாய்துளித்துளிஎழிலாய்துளிரதளிர;
உலாவிட கலையாய்நழுவும் நிலவாய் இரவுள்...

உலகம் தளர்வின்றி வளம்வரும் நிலைமையில்,
பழகு... பழகபாலும் கசந்திடும்! [ஆனால்குளுகுளு
நிலவோ இனிக்கும்அகிலமும் உன்தோன்றலில...
சுழன்றிட விடுபடவிடுமோநான்பாடும் பிரபஞ்சமே!

 

[*இராமன் எனப்படுவோனுடையது]

 

மலை முகடுகள்மீது பனிப்படுக்கை மயங்க

இயற்கை இனிமை!

நிலவும் முகிலும் தழுவி நீங்க...

வானம் இனிமை!

தாரகையர் தரணியை கண்டு ஏங்க

இரவு இனிமை!

நீயும் நானும் ஒன்றென ஒன்ற...

அன்பும் இனிமை!


தொட்டாலோ மெய்சிலிர்க்கும்தொட்டுஅ விழஆசை,

திட்டாலோ பண்உதிர்க்கும்; தென்றல் கனியிதழ்தேன்,
சொட்டால்உன் வாய்மணக்கும்; சொக்கிமகிழ நீதாலி...
கட்டாமல் நான்மணந்தால் காதல்!

 

    முன்னால்நீ தோன்ற முழுநில வாய்

தன்னால் அகலும் தவிப்பே

என்அன்பே நாம்ஒன்ற காண்பேன் 

அந்நாள் வருமோ வந்தால்நான் வாழ்வேன்

பெண்ணாள் நெடுநாள்!