Photos: Taylor Swift Army
ஆமையோட்டுள் ஆமைஅன்ன 
அமர்ந்திட்டாய்நீ நினைவிலே!
ஊமையாய் நம்காதல்ஏன் 
ஒளியலானது மூளையுள்?
பாலுள்ளேநெய் கலந்தவாறு 
பதிந்துஉலுக்கும் ஆசைகள்என்...
காலுள்போட கலகலக்கும்; 
கொலுசுஅன்ன சிணுங்குமே!
உன்னுள் விழித்திருந்து தினமும்உன் 
உறக்கம்நான் அழித்திட்டேன்!
கண்ணுள் ஊடுறுவ இரவுகளில்நீ 
காண்கனவும் கலைத்திட்டடேன்!
கன்னிஎன் அன்புநோக்கு உனக்கு 
கடும்நோய் என்று விலகாதே!
வந்துஉன் இதழ்களால் என்னைக்கடி 
உடன்மறையும் பிணிஎன் நெஞ்சே! 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக