அழகிய நாசியே!
உன்பணி எனக்கு வாழ்நாள் முழுவதும் -
அற்புதம் ஓசியே!
பலநூறு மாதங்கள் நான்வாழ்கிறேன் என்றால்-
அதுஉன் ஆசியே!
இந்தவாய் மட்டும் நாட்களை வீணாக்குகிறது-
எப்போதும் பேசியே!
என்நினைவுள் காதலன் வழுக்கி விழநான்-
அவனுக்கு பாசியே!
எதற்காக கடவுளாம்? விரைந்துற்றான்! என்னை-
விலகி காசியே!
இந்தகாற்று ஏன்தான் தழுவுகிறது என்னைபூ-
மகரந்தங் களைபூசியே!
நீஅனுப்பிட்ட என்மூச்சுக் காற்றோடு சென்றானே-
திரும்பிவரசெய் நாளை முடிகிறது மாசியே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக