பதமாய் கனிந்த உன்பருவம்; தேச--
ஒற்றுமைக்கும் என...
உருகி, என்னைநீ நோக்க...
அதனால், காதலிக்கின்றேன்!
இன்று பிரிவு...
துயரால், தகிக்கின்றேன்!
சிதறுற ஒவ்வொரு நொடியும்;
நான்மனம்...
நொந்து, துடிக்கின்றேன்! -- வா...
பதர்சாதி விலகி உன்னைஅடை--
கின்றேன்!
சுகம்பெறு, என்தலித் சுவாசமே!
பேதையில்லை! கொடி குறும்பு--
சுளை! கனிந்து,
போதைதரும் விருந்து; பூவெனவே--
மலர்ந்து, விரிந்து --
காதல்மது சுரந்து, கற்கண்டே!
எழுந்து; விழுந்து...
மோதும் கடல்அலை என்உள் எங்கும்;
முத்தமிடு விரைந்தே!