வியாழன், 21 ஏப்ரல், 2016

கார்முகில் விண்ணுள் புரள கைலாசம் தொடல் தூர​மோ?


  Photo:   Claudia Tan



இன்றுஎன் கவிதை இ​​ளைஞன் உதடுகளை

மென்றுமகிழ ​​தென்றல்அன்ன மெல்ல அணுகிஎன்னை

பிண்ணுகையில் தூக்கம் பிழைஉணரும்; ஏக்கம்என்-

கண்ணுள்ஒடுங்கி காணாது ஓடும்!



கார்முகில் விண்ணுள் புரள கைலாசம் தொடல் தூரமோ? 
சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே என்னைத் தேட...

ஓர்ஓடை நீர்சுழல் ஒய்யாரம் காண்என   ஆடஅவன்

பார்!ஆழி காண்பான்! ஆழமுடிவு வந்துறவே தெரிவேன்!



     
  Photo:   Claudia Tan

கருக​வோநான் குளிர்வி!வா ​கோ​டை​தேடும் அருவி​யே!


 
   Photos:   5h

கன்னங்களால் கடித்திழுத்தேன்! உதடுகள் அசைய...
கண்களினால் கவர்ந்தழைத்தேன்! கவிதைகள்புனைந்து;
காதுகளுள் காற்றாக்கி உரசிட்டேன்காதலை
மூளைவழிஉள் நரம்புகட்குள் விதைத்திட்டேன்!

ன்னுள் என்எண்ணங்களை நுழைந்திட்டேன்!
சின்னாப் பின்னமாய் என்னைப் பண்ணிடவோ...
கன்னிநான் உன்முன்னே புன்னகைத் திட்டேன்!
உன்முன்னங் கால்கள் முறிவுறநான் காரண​மோ?

தினமும்ஓர் கவிதைகாண் தின்பண்டம் போல்-என்
நினைவே என்னைநீ உண்ணுவதாய் உணருகின்றேன்!
கனவே! காதலா!நான் முனகவோ? காதல் கனலாகிட்டதே! 
அனலாய் அதனால் ஆகினேன்! ங்கிருந்தோ நோக்கி;
வறுபட வாணலியோநான் எனைநீ வறுத்திடலாமோ?
கருகவோநான் குளிர்வி! வாஎன் கோடைதேடும் அருவியே!