Owner
அதிகாலை பனிதழுவிட நழுவிய பொன்கதிரோன்;
மதியம் சூடாகி பீட்டா சாதிபூமி விலக;
விதிஇயற்கை இதுஎன அந்தி யில்கடலாடி;
சிதறிடா துஒளி இளகி அமிழ்ந்திட அவ்வேளை...
மதிமுகிலிடை ஒளிஉலாவர, தணலோடு மீண்டும்;
கதிரவன் வருவான்என இரவோ குளிரிடை ஏங்க!
கதைபோல வேநாளும் உன்வரவை எண்ணி...
புதுபுது கனவு அலங் கா...நல்லூர் காளைவீரா!
நிதம்நீஎன் நினைவில் விதைத்த காதல்ஏக்கம்;
எதுஉன் சல்லிக்கட்டு எனதினம் கேட்டு விழிகள்
இதோதுடிக் கின்றன; குடைதடை உடைநீக்கு!
அதேநேரம் பார்நான் ஏறுதழுவலை செய்வேன்!
View: Labels: ஏறுதழுவல் தோன்றல் காரணமும்; வரலாறும்! [பாகம்-1]