Jul 10, 2016
ஊறும் கிணறாகி, ஓடிவரும் ஆறாகி;
ஆறும் பாலாகி, அருந்திடும் மோராகி;
ஏறும் எறும்பாகி, தீ 'யாக' நெய்அன்ன;
சேர அவனை தினமுறுகிடு தேநெஞ்சு!
பண்ணையா? தெற்கு பார்த்து;
நிமிர்ந்திருக்கும்…
புன்னையா? புன்னை சூழ;
பூத்தழைக்கும்…
தென்னையா? செப்புஒளி இரவுள்;
சிதறும்நிலா-
பெண்ணாய் என்னை ஏன்தடவு--
கிறாய் தென்றலே?
மேகம் விலகிட மின்னல் பளிச்சிட
தாகபுவி வெப்பம் தணித்திடும் பூமழையே!
வேகமாய் ஓடுபிரிய மேனி கருத்தவனை…
தேகம் சிவக்கவரச் செய்!