Photo: Alaina-aurora Dubois
காற்றின்
அணைப்பில் கரையும் பனிமகனே!
ஆற்றுள்நீர் மீன்அசைய ஆடும்
சிலிர்ப்பாய்-பா
ஈற்றில்
நிரைநேர் இசைப்பதிப்பில் உன்வெண்பா-
ஊற்றில்
உரைந்திட்டேன் நான்!
குழந்தாய் எனநீ
குலாவிட்டாய் என்னுள்…
மழலையாய் மாறி
குதூகளித்தேன் பாச-
மடந்தையே! ஏனோ
மறந்தாய் உயிர்நான்;
விலகிடும் முன்காண் மகளே!