கண்களினால் கவர்ந்தழைத்தேன்! கவிதைகள்புனைந்து;
காதுகளுள் காற்றாக்கி உரசிட்டேன் - காதலை
மூளைவழிஉள் நரம்புகட்குள் விதைத்திட்டேன்!
 உன்னுள் என்எண்ணங்களை
நுழைந்திட்டேன்!
சின்னாப் பின்னமாய் என்னைப் பண்ணிடவோ...
கன்னிநான் உன்முன்னே புன்னகைத் திட்டேன்!
உன்முன்னங் கால்கள் முறிவுறநான் காரணமோ? 
தினமும்ஓர் கவிதைகாண் தின்பண்டம் போல்-என்
நினைவே என்னைநீ உண்ணுவதாய் உணருகின்றேன்! 
கனவே! காதலா!நான் முனகவோ? காதல் கனலாகிட்டதே!  
அனலாய் அதனால் ஆகினேன்! எங்கிருந்தோ நோக்கி;
வறுபட வாணலியோநான் எனைநீ வறுத்திடலாமோ? 

   Photos:   
 
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக