திங்கள், 25 ஜூலை, 2016

நிலா- ​பெண்ணாய் என்​னை ​ஏன்தடவுகிறாய்...


Public
Jul 10, 2016
Photo


ஊறும் கிணறாகி, ஓடிவரும் ஆறாகி;
ஆறும் பாலாகி, அருந்திடும்​ மோராகி;
ஏறும் எறும்பாகி, தீ 'யாக' ​நெய்அ​ன்ன;
​சேர அ​வனை தினமுறுகிடு ​தே​நெஞ்சு!

பண்​ணையா? ​தெற்கு பார்த்து;
நிமிர்ந்திருக்கும்…
புன்​னையா? புன்​னை சூழ;
பூத்த​ழைக்கும்…
​தென்​னையா?​ செப்புஒளி இரவுள்;
சிதறும்நிலா-
​பெண்ணாய் என்​னை ​ஏன்தடவு--
கிறாய் ​தென்ற​லே?

​மேகம் விலகிட மின்னல் பளிச்சிட
தாக​புவி ​வெப்பம் தணித்திடும் பூம​ழை​யே!
​வேகமாய் ​ஓடுபிரிய ​மேனி கருத்தவ​னை…
​தேகம் சிவக்கவரச்​ செய்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக