Moderator
கற்கண்டோ? அடிக்கரும்போ?
கற்கண்டும் அடிக்கரும்பும்--
வெட்கும் தமிழ்சொற் துண்டோ?
வெல்லம் எனஇளகி...
பற்ப்பதிய இதழ்கள் சிதறிடும்...
கனிச்சாறோ?
அற்புதமே! அறியணும்நீ என் 'இச்'
சுவையின் இரகசியமே!
நித்திரை விலகிட எத்தனையோ
நாள்--
காத்துப் பூத்து அழகு...
அத்தனையும் நெகிழ; புன்னகைக்கும்--
இந்த அசோக வனபூவை--
பித்தனைப்போல் முகர்ந்து சத்தமின்றி!
வித்தைகள் புரியாமல்...
பக்தி காணல்நீர் பைத்தியம் - நெய்
ஒழுக்கி... ஓதுதல் அன்ன;
தத்தளித் தல்ஏன்? காதலில் இன்று...
என்னுள் ஒன்று அலைவண்டே!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக