Photo: Taylor Swift Universe
[View also :
உன் ஈட்டிவிழி கூர்நோக்குகள்என், பட்டிடைமேல் வழுக்கிவிழ...
பேதையில்லை[நான்]; போதைதரும் விருந்து...
கற்கண்டோ? அடிக்கரும்போ? கற்கண்டும் அடிக்கரும்பும்;
வெட்கும்தமிழ் சொற்துண்டோ? வெல்லமென இளகி…
பற்ப்பதிய இதழ்நனைக்கும் பனித்தயிரோ? கனிச்சாறோ?
அற்புதமேநீ அறியணுமேஎன் 'இச்'சுவையின் இனமே!
கனிநினைப்பில் கொடிமொட்டு காய்ஆக, பூக்க;
பனிப்படர் மேகநிலவு பார்த்ததை நழுவ...
இனிஎன்ன தடையென ஏங்கிடும் கருவண்டு,
கனிக்காக காக்க,பூ கனிந்திட்டது தேனே!
உறிவாள்கள் அன்ன உறுத்திடும் கூர்விழிகள்;
எரிவேல்கள் எனவே இருப்பக்கம் பாய,
கொதிநீர் அன்ன குதித்திடுதே காதல்…
கதிரவன் எனவே கருக்கிடும்முன் கா,வாவே!
இலைபூ கொடிகனிகள் ஏங்கிடுதே நீசுவைக்க;
சிலைவடி சிற்பிஉளிச் செதுக்கிடும் இடம்அன்ன;
அலைநுரைக் கடலாய் ஆடிடுதுஎன் மனமே! அணைஎழிலாள் என்னைநீ அடையவராது, தினமே!நாணும்மான் விழிஅன்ன நடனம் ஆடிடும் மயில்ஒன்று எதை,
காணும் தவிப்பில் நதியோரம் கவலைப்பட்டு புரள்கின்றது? - தன்
துணையை அடைய துவள்கின்றது? முகில்வர வாடுகின்றது?
தினமும் என்னைக்காண நீவர, தேய தேன்நிலவும் தவிக்கின்றது!
உயிரே உணர்வேநீ அருகேவா என்றால்நான், காதல்
புயலாய்மாறி உன்னைத் தழுவிட புறப்படுவேன்! என்றன்;
உடலுள் அன்பை... நீ, தை; தைத்திட்டால், நம்நரம்புக்
கடலுள் பேதக்கரிப்பு ஓடாதே!ஆசை கயலோ நீந்தும் நனவிலே!
ஈதல் நினைவுக்குள் ஈரஇசைவிளைய உணர்வை விதையேன்!
காதல்கொடிப் பூமணந்து கனிகளைதேன் சொட்ட வழங்கிடுமே!
தினமும் கரங்கள் தீண்டஉன் தேகஏக்கங்கள் தீர பகற்பொழுது
கனவுஉடன் களைந்திடுமேநம் கண்கள் மாறிமாறி முத்தமிடுமே!
திரைமுகில் உரையுள், அரைகுறைப் பிறைஅன்ன என்னைநீ
சிறைகொள் ளாவிடில்உன் தேக(ம்)எடை குறைந்திடுமே!
தரைத்தொட்டுத் தடவிஉருள் புள்வெளிப் பனித்துளிஅன்ன காதல்;
உரையுமோ தழுவ? உணர்வுச் சூட்டில் கரையுமோ பாய?
நிறையுமோ உள்ளம்? நீயே பறையேன் மறையுமோ ஆசையே?
சிவ்' என்றே கமலப்பூ,
சிவந்திருக்கக் கருங்குவளை மலர்கள்கண்டு,
மெளனத்தை, கருவண்டு ஒன்று;
விலகிக் களித்(து)யிசை, சிதறிட்டதே!
செவ்வல்லிப் பூவாள்,
சிரிக்க வெளிப்பட்ட முல்லைபற் சரம்அன்ன;
'கவ்' என்றே என்னை, உன்மேல்,
காதல்போதை ஏறத் தூண்டிடுதே!
[செவ்வல்லி மலா, 'வாய்'க்கு, சொல்லப்பட்ட
உவமை; கமல மலர், முகத்துக்கு சொலப்பட்ட
உவமை; கருங்குவளை, கண்களுக்குச்
சொல்லப்பட்ட உவமை].
நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்டேன் - உன்றன்
கவிதை ஏடெனக் கண்டு என்முன்நீ படி,வா;
மெளனமாய் உருகிடு வேன்நீ மணந்திடவே!
வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிசெய்;
தமிழ்சங்க மாய்நான் தளிர!
எந்நாளும் நம்நாளே! இந்நாளோ... உன்னைஇப்
பெண்ணால்ஆள; பொன்நாளே! பின்னாளில் அந்நாள்தான்!
என்னைநீ ஆளும்நாள்! என்நாளோ? பூஆள்க!
என்சக் ரவர்த்தி யே!
சிட்டே! அமிழ்தகவி திக்கே! தரணியதை,
சுற்று; சிறகடிவிண் சுழற்று; மதிஒளியைச்
சொட்டு; மனம்குளிர தொட்டு; புதுக்கவிதை...
மொட்டு அவிழ; மெட்டு முகிழ; என்னுள்நீ ஒன்று!
வெல்லும்உன் தமிழொடு! விண்தொடு என்னோடு!
துள்ளும் சாதிகளை, காதல் சொல்லுள் நொறுக்கிடு;
முள்ளும் பேதம்தாண்டு; முத்தம் வலுக்கொண்டு!
சொல்சொந்தமே! நாம்ஒன்று என்று; உலகம்முன் நின்று!
கலகம்விடு; இந்தக் காவிரி உனக்காக வருவாள்என்,
உலகமே!இப் பெண்ணோடு,நீ ஒன்ற; ஒற்றுமை உருவுறும்;
நிலவுப் பிறைநுதல் தொடும்அழகு நேர்வகிடு கலையஎன்
இளமையாய் உச்சிநுகர்; ஏக்கம் நமக்குள் கலையவே!
கட்டுக் குழலசைய காதல்நீ செய்என்றே...
முட்டுதேஉன் மெளன விழிகள்!
பட்டுப்பா வாடையாள் பாவைநான் உன்னைநோக்க
கட்டிடு(து)ஏன் காதல்கூ டுசிட்டு!
கூடுகண்டு காதல் குமரி நகைக்கஉன்னுள்;
ஆடிடாதோ ஆசைசிட்டு ஊஞ்சல்!
ஊஞ்சல்அன்ன காதல்ஆட உண்ணும் விழிகள்உன்னால்
காய்ந்தமா டாகிடக் கண்டேன்!
காய்ந்தமா டாகிட்டேன் கன்னிநான்; நாணாதே!
சாய்ந்திட்ட தேபொழுதும் தான்!
பாயும்மா டாகிடும்முன் பாய்ந்தேநீ வந்துமெல்ல
ஓயவைநம் ஓசைஆசை யை!
கொடிபூக்க காய்ப்போல் குனியாதே உன்றன்
மடிஈந்தி என்னுள் மகிழ்!
காதலித்தாய் கைப்பிடி காதலா வாழ்ந்திடுவேன்!
மோதி முனகிடினும் சாதி!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக