சனி, 4 ஏப்ரல், 2015

கூடலாமா? என்றவர் கூடமுற்படஅவ் வேலை நீவிர்...









என்'பார் இனிநீ எனக்கெனவே பக்கம்வா!'
என்பார்என் காதலர்இவ் ஆரணங்கை - தன்அன்பால்,
செவ்விதழ் கள்திறக்க தின்பண்டம் போல்உண்பார்;
சிவ்வெனவே பாசம் சிரிக்கும்!

கோடைக் காலம்இது குளிரோ உடலைவருட அவரை...
வாடைக் காற்றேவிலகி உன்னை வரஏவிட்டது யாரோ?
ஊடும் தென்றலாய்நான் ஊடஅவர் உறவாட செல்லமாய்;
ஓடும்என் தயக்கமே; அவரோடு உறங்கும்என் கண்களே!

ஊடலாமா? ஊடி வாடலாமா? வாடிப் பின்இங்கே,
தேடலாமா? தேடி சூடலர்மா? பூவைக் கண்பார்க்க,
கூடலாமா? என்றவர் கூடமுற்படஅவ் வேலை நீவிர்...
மூடிட லாமோஎன் விழிகளை? மூடும்இமைகளே, மோசமே!

கார்முகில் புரளபார்த்திட்ட கைலாசங்கள் விண்தொட முயல,
சீரிடும் அரவுஒன்று சிறுவயல் ஊடே துணைகாண ஆட,
ஓர்ஓடை அங்கே நீாசுழல் ஒய்யாரம் காண்எனத் தோன்ற;
!ஆழி கண்டேன்! ஆழமுடிவை அவர்வந்துற தெரிவேன்!








கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக