செவ்வாய், 26 ஜனவரி, 2016

பாரதி 'பா'தித்திப் பா?கரிப் பா?


Embedded image permalink
   Photos: 



பாரதி'பா', ப*பா, 'பூ'பா, 'பார்'பா, பாரப்பா!
ஆ! 'ரதிப்'பா! 'அரி'பா,  அப்பப்பா! ஆராதிப்பா!
பாரதிபா தேன்பா 'சு
வைப்'பா! சுவையப்பா!
பாரதி  'பா'தித்திப்  பா?கரிப்  பா?சரி'பா'...
விடுநீயே!

[ப*] 'பா'  -   [அழகு] 'பாடல்'



Embedded image permalink 

ஞாயிறு, 24 ஜனவரி, 2016

என்கண்மேல் உன்பார்வைப் பதிந்தாலே போதும்...

Embedded image permalink  
  Photo:   
                                




சிக்கி முக்கி கற்களுக்குள்
சிக்கிக் கொண்ட [துயரத்] 'தீ'தான்!
திக்கி முக்கி எகிறியும்...
என்காதல் தப்ப வில்லையே!

எட்டிப் பற்றிக் கொண்ட பஞ்சாய்,

நான் ஆகினேன்! - ஏக்கம்,
எட்டும் திக்கும் கட்டித் தழுவ...
தெறிக்கும் நெருப்புப் புகையில்!
பட்டு வாழ்க்கைக் கனவுகள்...
சூடுற் றனவே!

விட்டு விட்டு எறியும் கனப்பு... 

நினைவு  தணிய வில்லையே!
தனிமைப்  பொறி தீப்பட்டும்...
உறவுகள்  சுட்டும்  முழுவதுமாய்,
கரிய வில்லையே!

அரை குறை நெருப்பாய் மாறி...

காதலும் தீய்க்குதே !
காதல் சுட்டும் உன்னை  எண்ணி...
நொந்த நினைவுகள் முழுவதுமாய்...
வெந்த பாடில்லையே!

உன்னோடு நான் 

வசிக்க வேண்டும் - வேறு,
உறவு ஏதும் வேண்டாம்!

என்கண் மேல்உன் பார்வைப் 

பதிந்தாலே போதும் - வேறு 
கவிதை  ஏதும்...
எனக்கு வேண்டாம்!

வியாழன், 14 ஜனவரி, 2016

உன்தமி​ழ்நான்! புன்ன​கை​வா! ​மகிழ்​வேன்!

Embedded image permalink
   Photo: 


இமயம​லை  எவ​ரெஸ்ட்சிகரம் ஏறு​வெல்! -என்
து​ணைஉனக்கு ​உண்டு!

உ​மைசிவன் ஆடிடும்​போதும், உருளாதாம்!
அப்பருவதம்​போல்...

அ​மைந்தஎழில் ம​லைக​ளை கடந்து ஆகாயம்... ​
​தொட முயற்சிக்கும்-

சமயம்வர சங்குஊதிடும் நி​லைபிறருக்​கே;
உனக்குஇல்​லை!



அண்டம் மிரண்டிட்டதாம் 'ஆ'என  வாய்பிளக்க...
உண்டு ​​சிரித்திட்டானாம்... ஓர்கவளத் துள்​இ​றைவன்!
மண்​அவ​னே தின்னட்டும்! மாற​வேண்டாம்; உன்தமி​ழ்நான்!
புன்ன​கை​வா! ​போதும் மகிழ்​வேன்!

புதன், 13 ஜனவரி, 2016

என்வாய்க்குள் இனிப்புதடவு தமிழ்பாஅன்ன...

Embedded image permalink
   Photos: 
                                    
                                   


 

பூக்க கனிகளைகொடி புன்னகைத்து அசைக்க...
ஊக்கம் கொழுக்க மொக்கு தனைமறந்து உள்சிரிக்க;
ஏக்கம் விலக்கிமலர் மணக்க இதழ்களை பிளக்க...
நா-காவா குயில்இசையாய், நாற்திசையும் இணைக்க;
மொய்என்உள் கருவண்டே! முனகாதே தனியே அங்கே!

தேனுள் இதழ்கள்நீ காதல்செய்எனத் திறந்துற்றன சொல்! 
நானும்உன் தமிழ்பாட்டே! சுழற்றும்ஈர  இசைஊற்றே!
திக்குஎட்டும் திரைகடல் தாண்டி எக்காலமும் வியக்கின்ற;
முக்கனிச்சாறுள் முக்கிஎடுத்த ஓலைத்தமிழ் காற்றே! கீற்றே!

கிள்ளிடுவேன் முகர்ந்திடுவேன் தவறுதல் நிகழ்ந்திடாது!
மெல்ல இதழ்கள்பிரி பூவே! வெட்கம்விலகி அள்ளிடுவேன்!  
என்வாய்க்குள் இனிப்புதடவு தமிழ்பாஅன்னநீயாக ஆக்கு!
பின்உன்னை விலகி சிறகுவிரிப் பேனோநான் விண்ணுக்கு!

Embedded image permalink
 

திங்கள், 4 ஜனவரி, 2016

இயற்கைப்பெண் பாடென நோக்க, முகில்மறைத்த முழுநிலவு...

Embedded image permalink
  Photos:




இயற்கைபெண் தன்னைப் பாடென
நோக்க...

முதல்நாள் -
உன்னைநான்  பார்க்காதபடி;
கூந்தல்  முகிலாகி...
இரவை இருட்டாக்கிட்டது!
நிலவை மறைத்திட்டது!

இரண்டாம்நாள் -
முகில் கூந்தல், இருமலைகள்
உச்சி வருட...
நாணிய துகில் பனிதுகல்கள்;
நழுவிட்டது!

மூன்றாம் நாள் -
பார்த்ததுமே உன்பார்வை
பகலைத் தோற்றுவித்தது!
காதல் குயில் கவிதைப் பாடிட்டது!

நான்காம் நாள் -
எழிற் கூந்தல் தென்றல்பட்டு
சற்றே அகல அழகு மலைகள்
பார்என்றே நிமிர்ந்து
விண்ணை நோக்கிட்டன!

ஐந்தாம்நாள் -
பகலில் மலைகள்அடி வாரத்தில்
ஓர் வாழைஇலை குருத்து
விரிந்த அழகில் ...
சமவெளி அற்புதமாய் காட்சித் தந்தது!


ஆறாம்நாள் -
மது அருந்திட்ட குதிரைஅன்ன
அடங்க ஓர்நதியின் எழில்
கூடுதுறை சிரிக்க என்கண்கள்
தொட்டன!

இயற்கைப்பெண் பாடென  நோக்க...
ஏழாம் நாள் -
விழிதழுவிய இமைபிறைஎழிலில் - உன்
முகில்மறைத்த முழுநிலவு –ன்னை
மாட்டுக்கறி உணவாய், உண்ண...
விழிகள் முயங்கிட்டன!


Embedded image permalink