திங்கள், 23 நவம்பர், 2015

பற்றுஎன் பார்வை; உற்று நோக்குவா உலாவும் காதல்...


  Photos:   Keshika Sri Karthikeyan


உன்னை எண்ணாமல் ஒருநாளும் - உறவே!
என்னுள்மனம் நிம்மதி காண்பதில்லை!
கண்ணுள் தோன்றும் கனவுகளில்  உனக்கு,
இணங்கி டாமல் இருந்திடு வதும்இல்லை!

கனவில் நிலவை காலைவரை வருடு கின்றாய்!
நனவில் இரவுவிடிய  நாளும் விலகு கின்றாய்!
தினமும் காலை திகைக்கின்றேன்! பகல்முழுதும்...
நினைவில் தழுவும் நிலைஅறிய... தவிக்கின்றேன்!

என்னசெய்ய உன்அணைப்பில் ஒன்ற எண்ணும்;
நான்ஓர் காதல்  பைத்தியக்காரி!
என்னை இன்னமும் நேரில்வந்து இ​ணையாத -
நீஓர் மதசாதி மனநோயாளி!

சிட்டுக் குருவிஎன சிதறவிடு முத்தம் அன்பால்!
கொட்டும் அருவிஎன குவிய சத்தம் என்னுள்!
உற்று நோக்குவா உலாவும் காதல்இப் பெண்ணுள்
பற்றுஎன் பார்வை பருவம் உருளஉன் பண்ணுள்!







வெள்ளி, 20 நவம்பர், 2015

காணஎன்னை உண்ணும், உன்கண்ணும் காத்திருக்க...

Photo



ஏடுபிரித்து கவிதை​நெகிழ - என்
      நடனத்தில் உருளும் ரசிகனே!
சா​​டை​செய்யும் கண்​ணோடு நீ...
      சங்கமிக்க வேண்டுமே!
ஊடல்எதற்கு ஓர்கன்னிபோல்  
      ஒருக்களித்துப் படுக்கநீ...
ஆடிட்டதுஎன் அங்கமே! 
      ஓடிட்டதுஉறக்கமே!

ஆ​மை​யோட்டுள் ஆ​மை அன்ன 
      அமர்ந்திட்டாய்நீ நி​னைவி​லே!
ஊ​மையாய் நம்காதல் ஏன்...
      ஒளியலானது மூ​ளையுள்?
பாலுள்​ளேநெய் கலந்தவாறு பதிந்து;
      உலுக்கும் ஆ​சைகள் - என்
காலுள்​போட கலகல​க்கும் ​
      கொலுசுஅன்ன சிணுங்கு​மே!

உன்னுள் விழித்திருந்து தினமும் - உன் 
      உறக்கம்நான் அழித்திட்​டேன்!
கண்ணுள் ஊடுறுவ இரவுகளில் - நீ 
      காண்கனவும் க​லைத்திட்ட​டேன்!
கன்னிஎன் ​அன்புநோக்கு உனக்கு...
      கடும்​நோய் என்று விலகா​தே!
வந்துஎன்​னை இதழ்களால் கடி - பி​ணி
      உடன்ம​றையும் என்நெஞ்​சே!

திங்கள், 16 நவம்பர், 2015

அ​டைக்காத்​தேன் ​சேவ​லே! ஆ​சையில் காதல்...


 

     Photo:   Mental Power ห้องมหัศจรรย์




இந்தித் திரைப்பட பாடல்களாய்...
என்னுள்நீ இசைக்க;

முந்திபிறந்து பூமியை,
முத்தமிட்ட தொல்தமிழாய்...

அன்று நுழைய என்றன்;
ஆசை ஓசை பிரதேசத்துள்...
 
இந்திய அற்புதமே!  அகன்றமண்ணுள்
மொழிமா நிலங்கள்

ஒன்றல்அன்ன, இருவர்நாம்;
பின்னநம் உணர்வுகளும்...

தென்றல் தீண்டிட்டாற்போல்...
எண்ண  சிலிர்க்கின்றதே!

கோழி சூட்டில்தான் குஞ்சு வெளிப்படும்!
தாலி அணியா சரித்திரம்உன் தோழி!
அடைக்காத்தேன்  சேவலே! ஆசையில் காதல்...
இடைத்தொட்டு ஏக்கம் உடை!

புதன், 11 நவம்பர், 2015

அன்​பே!நீ​ மனம்​தொட உன் கவி​தை ஆகி​னேன்!




 
   Photo:   Sarah Michelle Gellar-Prinze 


அவன்:

நீரோடையாய் என் நினைவில் நீந்திடும் நீ -  
முழங்கால் பளிச்சிட கணுக்காலில் இருந்து;

இருவிரல் தொட்டு; உயர்த்திட பாவாடை!
அது கண்ணுற்ற  களிப்பில் காதல் தேடிடுது நுகர...                                                                               
இங்கே கொடி பூத்திட இதழ் தேன்வாடை!

அவள்:


மாமாநீ தாலிநாடாத பாரத பண்பாடு பறவை! 
காதலில்... உன்னை மணந்திடும் ஆசையில்;
கனவுகள் எவ்வளவு தான்நான் காண்பதாம்?
என்கரம்  தடுக்க, நீ கோரிக்கை விடுக்க... 


தொடுவது எப்போதாம்?  என்றுஎன்  - 
இடையில் அசைகிறது பூபுது பால்ஆடை! 
அன்​பே!நீ​ மனம்​தொட உன் - 
கவி​தை ஆகி​னேன்!

 
                                                                                                                            

சனி, 7 நவம்பர், 2015

தாலிபரிமீ(து) என்னைநீ பகடைகாய் அடிமையாக்கினால்...



 





அக்குப் பஞ்சர் காதல் மருத்துவம் அறிவாயோ?

சிக்கல் ஆகிடாதுசிந்திக்காதே! அருகே நெருங்கு!
தெரிக்கும் பூதேன் உண்ணும் தினவில்  தாலியெனும் -
பரிமீ(து)ஏறி என்னைநீ பகடைகாய் அடிமையாக்கினால்...

கரிகூர் கொம்பு முனைஇரண்டு உன்வாயை கிழித்திடும்!
சிரிக்காதே கவிழ்ந்திடுவாய்உற்று நோக்காதே! திருந்திடு!
விரிவிழி வாளாலும் குதறிடுவேன்! அக்குப்பஞ்சர் [காதல்]
மருத்துவம்
இதோஎன் இடையைநீ பற்று அறிவாய்!