செவ்வாய், 31 மார்ச், 2015

வெல்லும்உன் தமிழொடு! விண்தொடு என்னோடு!




எந்நாளும் நம்நாளே! இந்நாளோ... உன்னைஇப்
பெண்ணால்ஆள; பொன்நாளே!  பின்னாளில் அந்நாள்தான்!
என்னைநீ ஆளும்நாள்! என்நாளோ? பூஆள்க!
என்சக் ரவர்த்தி யே!

சிட்டே! அமிழ்தகவி திக்கே! தரணியதை,
சுற்று; சிறகடிவிண் சுழற்று; மதிஒளியைச்
சொட்டு; மனம்குளிர தொட்டு; புதுக்கவிதை...
மொட்டு அவிழ; மெட்டு முகிழ; என்னுள்நீ ஒன்று!

வெல்லும்உன் தமிழொடு! விண்தொடு என்னோடு!
துள்ளும் சாதிகளை, காதல் சொல்லுள் நொறுக்கிடு;
முள்ளும் பேதம்தாண்டு; முத்தம் வலுக்கொண்டு!
சொல்சொந்தமே! நாம்ஒன்று என்று; உலகம்முன் நின்று!

கலகம்விடு; இந்தக் காவிரி உனக்காக வருவாள்என்,
உலகமே!இப் பெண்ணோடு,நீ ஒன்ற; ஒற்றுமை உருவுறும்;
நிலவுப் பிறைநுதல் தொடும்அழகு நேர்வகிடு கலையஎன்
இளமையாய் உச்சிநுகர்; ஏக்கம் நமக்குள் கலையவே!



நாணம் தடுத்திட்டாலும் நடுவில் பூத்திட்டேன்!


 
  Photos:  Taylor Swift Universe


சிவ்' என்றே கமலப்பூ,
     
சிவந்திருக்கக் கருங்குவளை மலர்கள்கண்டு,
மெளனத்தை, கருவண்டு ஒன்று;
     
விலகிக் களித்(து)யிசை, சிதறிட்டதே!
செவ்வல்லிப் பூவாள்,
     
சிரிக்க வெளிப்பட்ட முல்லைபற் சரம்அன்ன;
'
கவ்' என்றே என்னை, உன்மேல்,
     
காதல்போதை ஏறத் தூண்டிடுதே!

 

[
செவ்வல்லி மலா, 'வாய்'க்கு, சொல்லப்பட்ட
உவமை; கமல மலர், முகத்துக்கு சொலப்பட்ட
உவமை; கருங்குவளை, கண்களுக்குச்
சொல்லப்பட்ட உவமை].

நாணம் தடுத்திட்டாலும் நடுவில்உன் நினைவில்
பூத்திட்டேன் - உன்றன்
கவிதை ஏடெனக் கண்டு என்முன்நீ படி,வா;
மெளனமாய் உருகிடு வேன்நீ மணந்திடவே!

வானுள் ஒளிர்ந்து வளர்ந்துவிண் நோக்கிடினும்,
தேனே அருந்தஏங்கும் திங்களே!என், நாணும்
அமிழ்தே! எனக்காக ஆழ்ந்து பணிசெய்;
தமிழ்சங்க மாய்நான் தளிர!






திங்கள், 30 மார்ச், 2015

என்றன் உடலுள் அன்பை... நீ, தை; தைத்திட்டால்,








  Photos:  Taylor Swift Universe

நாணும்மான் விழிஅன்ன நடனம் ஆடிடும் மயில்ஒன்று எதை,
காணும் தவிப்பில் நதியோரம் கவலைப்பட்டு புரள்கின்றது? - தன்
துணையை அடைய துவள்கின்றது? முகில்வர வாடுகின்றது?
தினமும் என்னைக்காண நீவர, தேய தேன்நிலவும் தவிக்கின்றது!

உயிரே உணர்வேநீ அருகேவா என்றால்நான், காதல்
புயலாய்மாறி உன்னைத் தழுவிட புறப்படுவேன்! என்றன்;
உடலுள் அன்பை... நீ, தை; தைத்திட்டால், நம்நரம்புக்
கடலுள் பேதக்கரிப்பு ஓடாதே!ஆசை கயலோ நீந்தும் நனவிலே!

ஈதல் நினைவுக்குள் ஈரஇசைவிளைய உணர்வை விதையேன்!
காதல்கொடிப் பூமணந்து கனிகளைதேன் சொட்ட வழங்கிடுமே!
தினமும் கரங்கள் தீண்டஉன் தேகஏக்கங்கள் தீர பகற்பொழுது
கனவுஉடன் களைந்திடுமேநம் கண்கள் மாறிமாறி முத்தமிடுமே!

திரைமுகில் உரையுள், அரைகுறைப் பிறைஅன்ன என்னைநீ
சிறைகொள் ளாவிடில்உன் தேக(ம்)எடை குறைந்திடுமே!
தரைத்தொட்டுத் தடவிஉருள் புள்வெளிப் பனித்துளிஅன்ன காதல்;
உரையுமோ தழுவ? உணர்வுச் சூட்டில் கரையுமோ பாய?
நிறையுமோ உள்ளம்? நீயே பறையேன் மறையுமோ ஆசையே?