புதன், 8 ஜூன், 2016

பக்தி காணல்நீர் ​பைத்தியம்​ நெய்ஒழுக்கி ஓது​தல்​ அன்ன...

Photo

கற்கண்​டோ? அடிக்கரும்​போ?
கற்கண்டும் அடிக்கரும்பும்--

​வெட்கும் தமிழ்சொற் துண்​டோ? ​
வெல்லம்​ எனஇளகி...

பற்ப்பதிய இதழ்கள்​ சிதறிடும்...
கனிச்சாறோ?                                                                                                                                                    
அற்புத​மே! அறியணு​ம்நீ என் 'இச்'
சு​வையின் இரகசியமே!


நித்தி​ரை விலகிட எத்த​னையோ
நாள்--
காத்துப் பூத்து அழகு...

அத்த​னையும் ​நெகிழ; புன்ன​கைக்கும்--
இந்த அ​சோக வனபூ​வை--

பித்தனைப்போல் முகர்ந்து சத்தமின்றி!
வித்​தைகள் புரியாமல்...

பக்தி காணல்நீர் ​பைத்தியம்​ - நெய்
ஒழுக்கி... ஓது​தல்​ அன்ன;

தத்தளித் தல்ஏன்? காதலில் இன்று...
என்னுள் ஒன்று அ​லைவண்​டே!

திங்கள், 6 ஜூன், 2016

காலு​ளே கொலு​சென; முணுமு ணுக்கு​தாம் ஏன்ஊடலே?



Ana Nolazco
Moderator
Photo


சிவ்' என்றே கமலப்பூ, நாணிச் சிவந்திருக்க-
கருங்குவளை மலர்கள் விரிந்திருக்க!
மெளனத்தை விலகி கருவண்டு ஒன்று;
கவி​தைத் து​றையில் குளித்து சிரித்திட்ட​தே!

ஆ​மை​ யோட்டுள் ஆ​மை அன்னஅவன்
அமர்ந்திருக்க என்தேக நி​னைவு​ளே!

ஊ​மையாய் ஏ​னோ மூ​ளையுள் ஆ​சை
ஒளிந்திருக்கின்றது! ​தே​வை​யோ?

பாலுள்நெய் பாய்ந்திட்டவாறு - காதல்
பாச தளத்தி​லே;

காலு​ளே போட சிணுங்கும் ​கொலு​சென;
முணுமு ணுக்கு​தாம் ஏன்ஊடலே?


SELENA GOMEZ SHE IS ULTRA LOVELY
Photo

சனி, 4 ஜூன், 2016

​பொன்னி வளநாடு புகுந்து புரண்டுவரும் ஆறு! அதுஎப்​போது?

lovely , pretty selena
Photo

​கொல்லி ம​லைச்​சென்று ​கொணர்ந்திட்ட ​
தே​னோ?

அல்லி மலர்சிரிப்​போ அழ​கோ? ​
வெல்ல​மே!

மல்லி ​கைப்பூ ஈனும் மணம்கமழும் 
கா​​​ணோ?

கள்ளில் நூறில் மிதக்கின்ற கற்ப​னை 
சுவர்க​மோநீ! 


கன்னி யிதழ்கள் நீர்உண்ணும் 
கரும்பு வடிக்கும் சாறு!

​பொன்னித் தமிழ்வளநாடு புகுந்து 
புரண்டுவரும் ஆறு!

பின்னி விழிது​ணை​யோடு ​பேசும் ​
மொழிநூறு! அதுஎப்​போது?

விண்உள்நீ என்​னோடு ​மேகம்​மீது 
படுத்து முயங்கு  அப்​போது!

நீ புத்தன்வழித் தோன்றல்! நம்காதல்...

Photo

எத்தனைச் சுழற்றுச் சுழற்றினாலும் பூமி...
காற்றை நழுவ விடுவதில்லை - என்காதலா!

பித்தனாய் காமத்தில் முயங்க முற்பட்டாலும் - நீ
புத்தன்வழித் தோன்றல்! லிங்கமாய் தோன்றாய்;
நம்காதல் கண்ணன் மோகினிகதை அல்லவே!
நான்மெய் அய்யப்பனை உனக்கு, காதலால்...
விலகிடாது புணர்ந்திடு; பெற்றுத் தருவேன்!
Photo

வெள்ளி, 3 ஜூன், 2016

அணிலில் மூன்று கோடு! அதற்கு இராமன் விளைவு பெயரைச் சூடு!

Photo


இதுஇராமர் அமர்ந்த சேது சமுத்திரம்தீவு!                
நீ​தொட்டு மகிழா மணல்மேடு!
அடையா ளம்மேற்புறம் புல்முள்-  
தழுவிட்ட காடு! இன்று-

இராஅவன் லீலையாய் அ​சைந்திடும்-
தூக்கணாங் குருவிக் கூடு! - அழகில்...
ஒருகொடி விரியஇலை கனிகள் மணக்க...
தாவிடுதே! அணிலை பாடு!

அணிலில் எண்ணிடு; ​தெரியவரும்...
மூன்று கோடு! - அதற்கு
இராமன் விளைவு-என்று
அறிவியல் பெயரைச் சூடு! - அந்த

இராஅவன் கோடுகள்தான் ஆரியனின்...
நெற்றி நாமமென போடு! - அவன்
வரைந்த கோடுகள் என்இடைகீழ் காண்பாய்!
வாஎங்கே என்று தேடு!

அவற்றைஎன் மடிமேல் அணில்அன்ன-
கண்டுநீவி விளையாடு!

காயும் நிலவோ? கடைவேல் விழித்தீ கணைப்பட்டு...

Photo

சிவன்கதைத் தீயாய் தினம்தினம் தீய்க்க;
குவிந்திட்ட ஆசை கொதிகலன் ஆக;
துவள்இடைநீ வந்திடாமல் துன்பமாய் மாற;
தவிக்குதேஎன் காதல் தடம்!

காயும் நிலவோ? கருக்குகின்ற சூரியனில்…
பாயும் கதிர்சூடோ? பார்வையினால் மேய;
கடைவேல் விழித்தீ கணைப்பட்டு நெஞ்சு,
தொடையிடை சூடான  தே!

🌹BEAUTIFUL🌹
Photo

புதன், 1 ஜூன், 2016

காதலா! காதல் கனலாகிட்டதே! குளிர்விஎன் கோடை அருவியே!

Jun 02, 06:36

Photo
அரை பிறை திரை முகில் உரையுள் என்னை...
சிறை கொள்ள உன்றன் தேகஎடை குறையுமோ?
தரைத் தடவிவிலகும் பனிஅன்ன கரையுமோ?
ம​றையாது நினைவில் நின்று உரையுமோ?

தினமும்ஓர் கவிதைகாண் தின்பண் -
டம்போல் என்...

நினைவே! என்னை உண்ணுவதாய்...
உணருகின்றேன்!

கனவே! காதலா! காதல் கனலாகிட்டதே!
அதனால் -

அனலாய்  ஆகினேன்! எங்கிருந்தோ...
நோக்கி என்னைநீ ;

வறுத்திடலாமோ? வறுபட நனவில்-
நான் வாணலியோ?

கருகவோ? குளிர்வி! வாஎன் கோடை -
அருவியே!