சனி, 16 மே, 2015

குமரிஎன் அந்தரங்க ​போர்தள​த்துள், மின்னல் செய்யும் அன்பில்...


    Photos: Taylor Swift Universe
  



மூடும் பனிமுகில் மலைச்சிகரங்கள் அன்ன,
மூடிடாது என் துகில் விலக!
ஆடும் பூஇலை கனிகளெல்லாம் அசைகின்றன!
உணர்கிறேனே... காண்!
மனம்மிக மகிழ ஊடும், என்நாணம் ஓட மேல்வானம்!
உன்மனம்...
பாடிடும் தினம்ஓர் பாட்டு; காதல் பாவை
என்னைநீ நாடவே!

 

விண்​ணைத் ​தொடு​மோஇம் மங்கை,

மேனி​மேல் நி​லை​கொண்ட…
குன்றுகள்தாம் புடைத்தனஏன்?
குமரிஎன் அந்தரங்க ​போர்தள​த்துள்
மின்னல் செய்யும் அன்பில், இடி… ​

வெல்ல நிலவை; முகில்கள் அங்​கே...
 
பின்னல்​​செய்து ம​ழைக்கின்றன​வே!இப் ​
பெண்கிறங்க ஏதாவாது நீ​செய்!
 






சனி, 9 மே, 2015

ஆ​சைகள் ஓர் ஆழி! ஆழிக்கு ஓர் ​வேலி! ​ வேலியாய் ஓர் தாலி!








Photo :  TaylorSwift21



ஆ​சைகள் ஓர் ஆழி! ஆழிக்கு ஓர் ​வேலி! ​

வேலியாய் ஓர் தாலி!
 
மண்டியிடும் ஆணவ​மே! மானம், புனிதம்எது?

​பெண்கள்தம் கற்புநி​லை ​பேணும்உயர் பண்பா​டே!
ஆ​சைக​ளோ ஆழி; ​அடக்கிடநீ, ​போடுவா​யோ…   

ஓ​சைகட்கு  ​தாலி​வேலி ஓதி!

அ​டே! பேதவம்சப் பெண்ணடிமை பாவி!

சிவப்பு விளக்கு பகுதிகளில்...
பி​ழைவாழ்க்​கைத் தவறுகட்கு;

தாலிகள்தான் ஞான சூன்ய ​வேலி!

​திருமண வேலிகள் இட கூலி...

நீ பிதற்றும் போலி நீலி!
சீர் சிறப்பு சரி யில்​லை​யென்று...

அறுந்திடுவது ஏன் சிலருக்கு தாலி!
வரதட்ச​னண காளி ஓதல்களில்...

ப​றைந்திடும் புனிதம்யாவும் காலி!

தாலி அணிந்த பின்னும்

சமூகங்களி​டை​யே...
கற்பழிப்பு தினச் ​செய்தி



ஓதும் புனிதம் யாவும்,
சந்​தேகங்கள்  மு​ளைவிட - தாலி…

ட்டி.சுனாமி ஆகும் ​நாழி!​
​
அறிவா​யோ... ​

குடிகார கணவனுக்கு சாராய ​செலவுகட்கு,
அடகுக் க​டைகளில்... ​

அ​டைக்கலம் ஆகுகின்ற நி​லையில்;
கழுத்தில் இல்லாத மூளி, தாலி!



உன் ​பெண்ணடி​மை சகதிகளில்...
புனிதம் எதில்உண்டு,

என்று ஓதி ​தெளிவு ​செய்திடு; நீதி!
நாளும் சாதி மனநோயுள் உழலும் பாவி!

Cover photo
 

வெள்ளி, 8 மே, 2015

உன் இதழ்களால் என்​னைக்கடி உடன்ம​றையும்...



 


 

ஆ​மை​யோட்டுள் ஆ​மைஅன்ன 
அமர்ந்திட்டாய்நீ நி​னைவி​லே!

ஊ​மையாய் நம்காதல்ஏன் 
ஒளியலானது மூ​ளையுள்?

பாலுள்​ளேநெய் கலந்தவாறு 
பதிந்துஉலுக்கும் ஆ​சைகள்என்...

காலுள்​போட கலகல​க்கும்; ​
கொலுசுஅன்ன சிணுங்கு​மே!


உன்னுள் விழித்திருந்து தினமும்உன் 
உறக்கம்நான் அழித்திட்​டேன்!

கண்ணுள் ஊடுறுவ இரவுகளில்நீ 
காண்கனவும் க​லைத்திட்ட​டேன்!

கன்னிஎன் ​அன்புநோக்கு உனக்கு 
கடும்​நோய் என்று விலகா​தே!

வந்துஉன் இதழ்களால் என்​னைக்கடி 
உடன்ம​றையும் பி​ணிஎன் நெஞ்​சே!