வெய்யில்தொட வேகாமல்
சுடுகின்ற ஓடாகின்றேன்! - என்றன்
மையல் படநீ மகிழ்ந்து படிக்கின்ற
காதல் ஏடாகின்றேன்! - இந்தத்
தையல் அன்றாடம் குளிப்பதற்கு
தலையாட்டும் ஆடாகின்றேன்! - நீ
நெய்யை ஓதுவோனாய் வீணாக
நாளும் நெருப்பிலிடாது - உன்றன்
கையில் ஒன்ற அன்பில் சாதி
வேற்றுமை அவிழ்க்கும் நாடாஆகிடுவேன்!