Photo: Taylor Swift Universe
கற்கண்டோ? அடிக்கரும்போ? கற்கண்டும் அடிக்கரும்பும்;
வெட்கும்தமிழ் சொற்துண்டோ? வெல்லமென இளகி…
பற்ப்பதிய இதழ்நனைக்கும் பனித்தயிரோ? கனிச்சாறோ?
அற்புதமேநீ அறியணுமேஎன் 'இச்'சுவையின் இனமே!
கனிநினைப்பில் கொடிமொட்டு காய்ஆக, பூக்க;
பனிப்படர் மேகநிலவு பார்த்ததை நழுவ...
இனிஎன்ன தடையென ஏங்கிடும் கருவண்டு,
கனிக்காக காக்க,பூ கனிந்திட்டது தேனே!
உறிவாள்கள் அன்ன உறுத்திடும் கூர்விழிகள்;
எரிவேல்கள் எனவே இருப்பக்கம் பாய,
கொதிநீர் அன்ன குதித்திடுதே காதல்…
கதிரவன் எனவே கருக்கிடும்முன் கா,வாவே!
இலைபூ கொடிகனிகள் ஏங்கிடுதே நீசுவைக்க;
சிலைவடி சிற்பிஉளிச் செதுக்கிடும் இடம்அன்ன;
அலைநுரைக் கடலாய் ஆடிடுதுஎன் மனமே! அணைஎழிலாள் என்னைநீ அடையவராது, தினமே!View more:
பேதையில்லை[நான்]; போதைதரும் விருந்து...
உன் ஈட்டிவிழி கூர்நோக்குகள்என்,
பட்டிடைமேல் வழுக்கிவிழ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக