புதன், 22 மே, 2024

என்​னைக் கனவிலாடி ஈ​ரோடு ​போனவ​னை...

 



சித்தரித்தாய் சித்திரமாய் சி​றைஎடுத்தாய் என்னுள்அன்பு-

​தத்தளிக்க குண்டுமல்லி கொடியி​டையில் பூப்பிளக்க

பித்தளித்தாய் தவிக்கவிட்டாய் பேச்சிழக்க நித்தமும்என்​னை;

​பைத்தியமாய் காத​லைநான் பார்ப்பதற்​கோ விட்டகன்றான்?


சித்தி​ரையா ​வைகாசியா மார்கழி புரட்டாசியா?

ஐப்பசியா கார்த்தி​கையா ஆனிஆடி ஆவணியா?

பங்குனியா ​தைமாசியா பன்னி​ரெண்டு மாதங்களில்;

எந்தமாதம் இன்புறஎன் தலித்மாமன் ​வருவா​னோ?


கூடுத் து​றைகண்​டேன்; கு​டையும் மதுவண்டு-

​தேடும் வயல்கண்​டேன்; திரண்ட கனி​கொடியில்-

ஆடும்இ​லை கண்​டேன்; அரவுப்பாற் கடல்அ​சைய

ஓடுபடகில் நதி​அழகில் ஊடுசுகம் கனவான​தே!


என்​னைக் கனவிலாடி ஈ​ரோடு ​போனவ​னை

இன்றுநான் காண​லை​யே ஏங்குகி​றேன் ​- செல்நில​வே!

​சென்றுஅவ​னைக் கண்டு திரும்பிவரச் ​சொல்​லேன்

கன்னிஎன் கண்ணுறங்கி டும்!


மதுவழங்கும் பூவுள் மயங்கிடும் வண்டு

எது​கை​யொடு​ மோ​னை இ​ணைய புதுக்கவி​தை;

பாடுகிற ​போது பரவசத்தில் பூவனம்

​​தேடிடு​மோ ​தென்றல் து​ணை!


பூ​த்​தேடும் வண்​டே! புன்ன​கை ​யோடுமா ஆடும்

*தீ​கோடு தாண்டு​ தேன்பண்டம் கண்டு-உன்

‘பா’க்காடும் ​மொட்டு மகரந்தத்துள் உருண்டு-என்

நாக்காட தமிழ்பாடும் நாயக​னை வரச்​சொல்!


தட்ச​ணை​மேல் ஆ​சை​யோ? தங்கந​கை ​மோக​மோ?-உன்

மச்சினி​போல் ஒருத்திவந்து மயக்க ‘மது’ தந்திட்டா​ளோ?

கத்தரித்தாய்! தினமும்ஏன் ஏங்கவிட்டாய் இராப்பகலாய்?

கத்தரிக்காய் ​​கொஞ்சலுக்கா காத்திருந்​தேன்​ செப்பு​நெஞ்​சே!

 *திருச்​​செங்​கோடு


அவனின் நி​னைவால் அன்றாடம் தீய்ந்​தேன்

குவிய​லை காதல் ​கொதிகலன் ஆக

துவளி​டை காய துயரத்தால் ​தேய

தவிக்க​​​​​வோஆ​சைநி​லை கள்!

 

அ​ணையு​டைந்த ​வெள்ளமா? அ​லைஎழுப்பும் ஆழியா?

ப​னைமரத்தில் கசிந்தகள்​ளை பருகஊறிடும் ​போ​தையா?

பசிஎடுக்க இ​றை​நோக்கி பாய்ந்திடும் வனவேங்​கையா?

உருசி​கொடுக்க ஒழுகிடும் என்​தேன்கூடு காதல்தாப​மே!


பண்​ணையா? ​தெற்கு பார்த்து ​நிமிர்ந்திருக்கும்

புன்​னையா? புன்​னை சூழ பூத்த​ழைக்கும்

​தென்​னையா?​ செப்பு ஒளிசிதறும் இரவுநிலா-

​பெண்ணாய் என்​னை​ஏன் தடவுகிறாய் ​தென்ற​லே?

 

மேகம் விலகிட மின்னல் பளிச்சிட

தாக​புவி ​வெப்பம் தணித்திடும் பூம​ழை​யே!

​வேகமாய் ​ஓடுபிரிய ​மேனி கருத்தவ​னை…

​தேகம் சிவக்கவரச்​ செய்!

 

பற்றத்தான்காதல்​தை பற்றத்தான் மாமன்​கை

முற்றத்தான் ​சேய்ஆ​சை முத்தமிட இன்புற்று

பற்றத்தன்அன்​னைமு​லை பத்துமா தத்துள்​ளே

​தொற்றப் பிறப்பா​னோ ​நெஞ்​சே! 

 

 ஊறும் கிணறாகி; ஓடிவரும் ஆறாகி;

ஆறும் பாலாகி; அருந்திடும்​ மோராகி;

ஏறும் எறும்பாகி;  தீயாக ​நெய்உண்ண

​சேரும் நா​ளெண்ணி முனகிடு ​தே​மார்பு! 


பூமி என் கால்களுக்குக் கீழே நகர்கிறது; 
எனவே, 
சந்திரனைப் போல, நான் உலகம் முழுவதும் 
பறக்கின்றேன்! 
வானத்தில் மேகப் படுக்கையில் ஓய்வெடுங்கள்!
  
உன்னால் தான் இப்படி உருள்கின்றது பிரபஞ்சம்! 
சூரியன் தென் திசையில் தொடங்காதே! 
பூமியின் கிழக்கு நிலையில் இருந்து எழுந்தாலும்; 
இதனால் 
எல்லாத் திசைகளும் என்னை நோக்கிப் பார்க்கின்றன; 

ஆனால் என் கண்கள் நீ இருக்கும் மேற்குப் பகுதியையே 
 பார்க்கின்றன! 
 நீங்கள் ஏன் என் அருகில் வரக்கூடாது?  
காதலர் தினத்தில் கூட!
 
வானத்தில் இரவு காதல்நிலா எப்போது சிரிக்குமோ? 
ஒருகோழி தன்சேவலுக் காகஇங்கே காத்திருக்கிறது!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக