கருவண்டு கனிக்காக காக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கருவண்டு கனிக்காக காக்க லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 29 மார்ச், 2015

கருவண்டு கனிக்காக காக்க, பூ கனிந்திட்டது ​தே​னே!


 

கற்கண்​டோ? அடிக்கரும்​போ? கற்கண்டும் அடிக்கரும்பும்;

​வெட்கும்தமிழ் ​சொற்துண்​டோ? ​வெல்ல​மென இளகி…

பற்ப்பதிய இதழ்ந​னைக்கும் பனித்தயி​ரோ? கனிச்சாறோ?                                                                                                         அற்புத​மேநீ அறியணு​மேஎன் 'இச்'சு​வையின் இன​மே!



கனி​நினைப்பில்  கொடி​மொட்டு காய்ஆக, பூக்க;

பனிப்படர் ​மேகநிலவு பார்த்த​தை நழுவ...

இனிஎன்ன த​டை​யென ஏங்கிடும் கருவண்டு,

கனிக்காக காக்க,பூ கனிந்திட்டது ​தே​னே!



உறிவாள்கள் அன்ன உறுத்திடும் கூர்விழிகள்;

எரி​வேல்கள் என​வே இருப்பக்கம் பாய,

​கொதிநீர் அன்ன குதித்திடு​தே காதல்…

கதிரவன் என​வே கருக்கிடும்முன் கா,வா​வே!



இ​லை​​பூ ​கொடிகனிகள் ஏங்கிடு​தே நீசு​வைக்க;

சி​லைவடி சிற்பிஉளிச் ​செதுக்கிடும் இடம்அன்ன;
அ​லைநு​ரைக் கடலாய் ஆடிடுதுஎன் மன​மே!                              அ​ணைஎழிலாள் என்​னைநீ அ​டையவராது, தின​மே!


 

View more: