சனி, 16 மே, 2015

குமரிஎன் அந்தரங்க ​போர்தள​த்துள், மின்னல் செய்யும் அன்பில்...


    Photos: Taylor Swift Universe
  



மூடும் பனிமுகில் மலைச்சிகரங்கள் அன்ன,
மூடிடாது என் துகில் விலக!
ஆடும் பூஇலை கனிகளெல்லாம் அசைகின்றன!
உணர்கிறேனே... காண்!
மனம்மிக மகிழ ஊடும், என்நாணம் ஓட மேல்வானம்!
உன்மனம்...
பாடிடும் தினம்ஓர் பாட்டு; காதல் பாவை
என்னைநீ நாடவே!

 

விண்​ணைத் ​தொடு​மோஇம் மங்கை,

மேனி​மேல் நி​லை​கொண்ட…
குன்றுகள்தாம் புடைத்தனஏன்?
குமரிஎன் அந்தரங்க ​போர்தள​த்துள்
மின்னல் செய்யும் அன்பில், இடி… ​

வெல்ல நிலவை; முகில்கள் அங்​கே...
 
பின்னல்​​செய்து ம​ழைக்கின்றன​வே!இப் ​
பெண்கிறங்க ஏதாவாது நீ​செய்!
 






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக