வெள்ளி, 20 நவம்பர், 2015

காணஎன்னை உண்ணும், உன்கண்ணும் காத்திருக்க...

Photo



ஏடுபிரித்து கவிதை​நெகிழ - என்
      நடனத்தில் உருளும் ரசிகனே!
சா​​டை​செய்யும் கண்​ணோடு நீ...
      சங்கமிக்க வேண்டுமே!
ஊடல்எதற்கு ஓர்கன்னிபோல்  
      ஒருக்களித்துப் படுக்கநீ...
ஆடிட்டதுஎன் அங்கமே! 
      ஓடிட்டதுஉறக்கமே!

ஆ​மை​யோட்டுள் ஆ​மை அன்ன 
      அமர்ந்திட்டாய்நீ நி​னைவி​லே!
ஊ​மையாய் நம்காதல் ஏன்...
      ஒளியலானது மூ​ளையுள்?
பாலுள்​ளேநெய் கலந்தவாறு பதிந்து;
      உலுக்கும் ஆ​சைகள் - என்
காலுள்​போட கலகல​க்கும் ​
      கொலுசுஅன்ன சிணுங்கு​மே!

உன்னுள் விழித்திருந்து தினமும் - உன் 
      உறக்கம்நான் அழித்திட்​டேன்!
கண்ணுள் ஊடுறுவ இரவுகளில் - நீ 
      காண்கனவும் க​லைத்திட்ட​டேன்!
கன்னிஎன் ​அன்புநோக்கு உனக்கு...
      கடும்​நோய் என்று விலகா​தே!
வந்துஎன்​னை இதழ்களால் கடி - பி​ணி
      உடன்ம​றையும் என்நெஞ்​சே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக