Moderator
சிவ்' என்றே கமலப்பூ, நாணிச் சிவந்திருக்க-
கருங்குவளை மலர்கள் விரிந்திருக்க!
மெளனத்தை விலகி கருவண்டு ஒன்று;
கவிதைத் துறையில் குளித்து சிரித்திட்டதே!
ஆமை யோட்டுள் ஆமை அன்னஅவன்
அமர்ந்திருக்க என்தேக நினைவுளே!
ஊமையாய் ஏனோ மூளையுள் ஆசை
ஒளிந்திருக்கின்றது! தேவையோ?
பாலுள்நெய் பாய்ந்திட்டவாறு - காதல்
பாச தளத்திலே;
காலுளே போட சிணுங்கும் கொலுசென;
முணுமு ணுக்குதாம் ஏன்ஊடலே?
Owner
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக