May 31, 2016
lovely , pretty selena
கொல்லி மலைச்சென்று கொணர்ந்திட்ட
தேனோ?
அல்லி மலர்சிரிப்போ அழகோ?
வெல்லமே!
மல்லி கைப்பூ ஈனும் மணம்கமழும்
காணோ?
கள்ளில் நூறில் மிதக்கின்ற கற்பனை
சுவர்கமோநீ!
கன்னி யிதழ்கள் நீர்உண்ணும்
கரும்பு வடிக்கும் சாறு!
பொன்னித் தமிழ்வளநாடு புகுந்து
புரண்டுவரும் ஆறு!
பின்னி விழிதுணையோடு பேசும்
மொழிநூறு! அதுஎப்போது?
விண்உள்நீ என்னோடு மேகம்மீது
படுத்து முயங்கு அப்போது!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக