திங்கள், 30 மே, 2016

எதற்காக கடவு​ளாம்? விரைந்துற்றான்! காதலன் என்​னை விலகி காசி​யே!

காற்​றை உள்ளிளுத்து​ வெளிஅனுப்பிடும்-என்
அழகிய நாசி​யே!

உன்பணி எனக்கு வாழ்நாள் முழுவதும் -
அற்புதம் ஓசி​யே!

பலநூறு மாதங்கள் நான்வாழ்கி​றேன் என்றால்-
அதுஉன் ஆசி​யே!

இந்தவாய் மட்டும் நாட்க​ளை வீணாக்குகிறது-
எப்​போதும்​ பேசி​யே!

என்நி​னைவுள் காதலன் வழுக்கி விழநான்-
அவனுக்கு பாசி​யே!

எதற்காக கடவு​ளாம்? விரைந்துற்றான்!  என்​னை-
விலகி காசி​யே!

இந்தகாற்று ஏன்தான் தழுவுகிறது என்​னைபூ-
மகரந்தங் க​ளைபூசி​யே!

நீஅனுப்பிட்ட என்மூச்சுக் காற்​​றோடு​​ சென்றா​னே-
திரும்பிவர​செய்  நா​ளை முடிகிறது மாசி​யே!




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக