புதன், 4 மே, 2016

மானுட -- நாகரிகம் அன்பு கருத்தரிக்க சுதந்திரத்தை விளைவிப்போம்!

Dfddd

 

ஆண்

உன்னை நான் மணக்க முடியுமா?

பெண்:
ஏன் முடியாது?

பெண்ணே நீவெளி நாடு அல்லவா?

எந்நாடும் உலகில் உள்ளது!

காதல் மட்டுமே நாம்இணையப் போதுமா?
இடையூறு ஏதுமே... இல்லையா?

இருவரு​மே அன்பால் ஒன்றிட -
பேத ​தொல்லைகள் மானுட
நாகரிக அகிலத்தில் இல்லை அல்லவா?

கடைஆணி கழன்றிட்ட 
மாட்டு மரவண்டிஅன்ன - நாம்
குடைசாய்ந்து வீழ்வோமா?

ஆயிரமாய் நொருங்கிட்ட மானுடத்துள்
மதம் சாதி ஓதிடு வோன்தான் இன்றும்
காதல் கடையாணியா? 

நம்காதல் உடைந்திடாதா?
மத பேதங்களால்...
இருவரும் அடிமைகளாய் மண்ணுள் -
தொடர்ந்து ஒடுங்கிட மாட்​டோமா? 

காதல், மதம்சாதி அல்லவே?
கடை ஆணி களால் ஓடும்
மாட்டுமர வண்டிகளாய்-நாம்,
உடைந்திடவும் வேண்டாமே!

இது அன்பு இணைதள யுகம் அல்லவா?
உங்கள் ஆ​சை வளைத்தளம் திறந்து, 
கணனி காட்சிகள்அன்ன இணைந்து...

காதல் விண்கலத்தில் இ​ணைந்து  
செவ்வாய்மீது முத்தமிட்டு நகர்ந்து
பால்வெளி வீதியை ஆய்​வோ​மே!
இது அறிவியல் யுகம் அல்லவா?

சுதந்திரத்தை விளைவிப்போம்!
இருவரு​மேமானுட --
நாகரிகம் அன்பு கருத்தரிக்க
இ​ணைந்திருப்​போம்!

தாலி, கல்யாணம், தேவையில்லை!
தாமதிக்காமல் என்னோடு கல...வா!
இன்றும் ​வேத​னை காட்டு மரவண்டிகள்;
அறிவியல் உலகத்தில்நமக்கு எதற்கு?  


  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக